• Sun. Oct 19th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

முதலமைச்சர்போல் மா. சுப்பிரமணியன் முட்டாள் தனமாக உலர வேண்டாம் – எச்.ராஜா பேட்டி…

ByVasanth Siddharthan

May 5, 2025

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது குறித்த கேள்விக்கு, யார் அந்த முட்டாள் என எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

2013ம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியிலேயே முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதனை உச்சநீதிமன்றமும் எடுத்துள்ளது. தற்போது இதை தடுப்பதற்கு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு போடுவது மட்டுமே ஒரே தீர்வு. மக்களை திசை திருப்புவதற்காக மா. சுப்பிரமணியன், முதலமைச்சர் போல் முட்டாள் தனமாக உலர வேண்டாம் என நான் கேட்டுக்கொள்கிறேன் எச் ராஜா பேட்டி அளித்துள்ளார்.

மதுரையில் காவி உடை கட்டிய சாமியார் என்பதால் போலீசார் அவரை மிரட்ட வேண்டாம். பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும் திருமாவளவன் கம்யூனிஸ்ட்களை கண்காணிக்க வேண்டும். காவி உடை கட்டியவருக்கு எதிராக மிரட்டல் விடுவதாக காவல்துறை செயல்படாதீர்கள் என மதுரை ஆதீனம் குறித்து எச். ராஜா பேட்டி அளித்தார்.

திருமாவளவன் கம்யூனிஸ்ட் ஆகியோர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அறிக்கை கொடுக்கின்றனர். ஆனால், இங்கு இருக்கக்கூடிய முஸ்லிம்கள் தேசபக்தர்கள். யுத்தம் அறிவித்தாலும் அவர்கள் இந்தியாவிற்கும், இராணுவத்திற்கும் ஆதரவு அளிப்பார்கள் இவர்கள் நல்லவர்கள். ஆனால் திருமாவளவன் கம்யூனிஸ்ட் ஆகியோர் தீய சக்திகள் என திண்டுக்கல்லில் எச்.ராஜா பேட்டியில் தெரிவித்தார்.

2024ல் உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்கள் தொகை கணக்கெடுப்பின்பொழுது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் H.ராஜா கலந்துகொண்டு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது..,

“பஹல்காம் தாக்குதல் மோசமான, அநாகரிகமான மனித குலத்திற்கு எதிரான செயல். தேசவிரோத, பாகிஸ்தான் ஆதரவு சக்திகளான திருமாவளவன், கம்யூனிஸ்டுகளுக்கு என்ன ரிசர்வேஷன் உள்ளது. யுத்தம் அறிவிக்கவும் இல்லை, யுத்தம் வரும் என்று யாரும் சொல்லவில்லை. பாகிஸ்தான் எதிராக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், ஒன்றாக சிந்து நதி நீர் பங்கீடு தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் 80% தண்ணீர் சிந்து நதிநீரை நம்பியுள்ளது. தற்போது அதனை நிறுத்தியதன் மூலம் அங்கு மின்சார உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் என்ன எதிர்ப்பு என்று பலர் கேட்கின்றனர் நீரை கொடுக்காமல் இருக்கலாமா? சர்வதேச சட்டம் ஒப்புக் கொள்ளுமா? அது மத்திய அரசின் பணி. மத்திய அரசை ஆதரித்து திருமாவளவன், கம்யூனிஸ்ட் பேசி இருக்க வேண்டுமா? இல்லையா?

திருமாவளவன் கம்யூனிஸ்ட் ஆகியோர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அறிக்கை கொடுக்கின்றனர். ஆனால் இங்கு இருக்கக்கூடிய முஸ்லிம்கள் தேசபக்தர்கள் யுத்தம் அறிவித்தாலும், அவர்கள் இந்தியாவிற்கும், இராணுவத்திற்கும் ஆதரவு அளிப்பார்கள் இவர்கள் நல்லவர்கள். ஆனால் திருமாவளவன் கம்யூனிஸ்ட் ஆகியோர் தீய சக்திகள். காஷ்மீர் மீட்கப்பட்ட நேரத்தில் அதனை தடுத்தது அப்போதைய பிரதமர் ஜவர்கலால் நேரு இதனால் தற்போது பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் சில காஷ்மீர் பகுதிகள் உள்ளது.

பாகிஸ்தானை பார்த்து பயந்தவர்களாக காங்கிரஸ் அப்போது இருந்தே இருந்து வருகிறது. பிரதமர் திடமான நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் சீனாவைத் தவிர அனைவரும் ஆதரவாக உள்ளனர். தற்போது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும் போது, நாங்கள் போரை விரும்பவில்லை. பாகிஸ்தான் இந்தியாவை தாக்கும் ஆனால் இந்தியா பக்கம் நின்று பாகிஸ்தானை நிர்மூலம் ஆக்குவோம் என தெரிவித்துள்ளார்.

மதுரையில் காவி உடை கட்டிய சாமியார் என்பதால் போலீசார் அவரை மிரட்ட வேண்டாம். பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும் திருமாவளவன் கம்யூனிஸ்ட்களை கண்காணிக்க வேண்டும். காவி உடை கட்டியவருக்கு எதிராக மிரட்டல் விடுவதாக காவல்துறை செயல்படாதீர்கள். போலீசாரை நான் தவறாக கூறவில்லை.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பதிவு போட்டால் கைது செய்வோம் என காவல்துறை அறிவிப்பு கொடுத்திருக்க வேண்டும். தற்போது மக்கள் கண்காணிப்பு குழு என்பது தேவை. திருமாவளவன் கம்யூனிஸ்டுகளை கண்காணிக்க வேண்டும்.

பஹல்காம் தாக்குதலை திசை திருப்புவதற்காகவே சாதிவாரி கணக்கெடுப்பை கையில் எடுத்துள்ளது மத்திய அரசு என காங்கிரஸ் கூட்டத்தில் கூறியது குறித்த கேள்விக்கு..,

2010 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் பா.சிதம்பரம் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டோம் என்று கூறினாரா? இல்லையா? 2011ல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை. மோடி அதனை செய்வேன் என்று கூறியதும் தற்போது என்ன வந்தது என்று தெரியவில்லை.

பலமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் பொழுது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் அப்போது சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் எடுக்கப்படவில்லை. 2024 இல் உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்கள் தொகை கணக்கெடுப்பின்பொழுது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என மா சுப்பிரமணியன் கூறியது குறித்த கேள்விக்கு..,

யார் அந்த முட்டாள்? ஒன்றரை லட்சம் பேர் தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதியுள்ளனர். அதில் யாராவது ஒருவர் தவறாக நடந்து இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம். மா. சுப்பிரமணியன் படித்திருந்தால் என்றால் கேள்விக்கு பதில் சொல்லட்டும்.

நீட் இல்லை என்றால் மாணவர்களை எப்படி சேர்ப்பது. பனிரெண்டாவது மதிப்பெண் அடிப்படையில் என்று கூறுகின்றனர். ஜிப்மர் தேர்வில் இந்த மதிப்பெண் எடுபடுமா? என்றால் இல்லை. இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளை பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்றால் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்ணை ஏற்றுக்கொள்வார்களா என்றால் அதுவும் இல்லை.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மருத்துவ சீட் 11,400 இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய மருத்துவ சீட்களுக்கான தேர்வு தான் நீட். இல்லை என்றால் ஜிப்மர் மற்றும் டெல்லி என தனித்தனியாக தேர்வு எழுத வேண்டும். திரவிடியன் ஸ்டாக் முட்டாள்கள் என ஏற்கனவே தெரிவித்துள்ளேன். ஆனால் இதனை ஈவேரா கூறியுள்ளார்.

நீட்டை கொண்டு வந்தது திமுக. அப்போது நீட்டை ஆதரித்தது காந்திய செல்வன் என்ற திமுக பாராளுமன்ற உறுப்பினர். 2013 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியிலேயே முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதனை உச்சநீதிமன்றமும் எடுத்துள்ளது. தற்போது இதை தடுப்பதற்கு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு போடுவது மட்டுமே ஒரே தீர்வு. மக்களை திசை திருப்புவதற்காக மா சுப்பிரமணியன், முதலமைச்சர் போல் முட்டாள்தனமாக உலர வேண்டாம் என நான் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.