• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஈரோடு வருகை

ByA.Tamilselvan

Nov 10, 2022

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
பிற்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலமாக அவர் கோவை வருகிறார். அங்கிருந்து ஈரோட்டுக்கு சாலை மார்க்கமாக மாலை காரில் வருகிறார். பின்னர் ஈரோடு பெருந்துறை ரோடு, மேட்டு கடையில் உள்ள தங்கம் மஹாலில் நடக்கும் தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். அதன் பிறகு அவர் ஈரோட்டில் இருந்து கிளம்பி கரூருக்கு சென்று இரவில் தங்குகிறார். முதலமைச்சர் வருகையையொட்டி ஈரோட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர் செல்லும் சாலையின் இருபுறமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள்.