• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தாசில்தார் தாக்கப்பட்ட வழக்கில் மு.க.அழகிரி விடுதலை

Byவிஷா

Feb 16, 2024

கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலின் போது முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தாசில்தாரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் இன்று மதுரை மாவட்ட நீதிமன்றம், மு.க.அழகிரி உள்ளிட்டோரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
தாசில்தாரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோரை விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின் போது தாசில்தாரை தாக்கியதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. அதாவது, 2011ம் ஆண்டு மதுரை வேலூர் அருகே சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் மேற்கொண்டபோது மு.க.அழகிரி, வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்ததாக அதிமுக தெரிவித்தனர். இந்த புகாரை தொடர்ந்து, மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து உள்ளிட்டோர் அங்கு சென்று வீடியோ எடுத்ததாகவும், இதற்கு மு.க.அழகிரி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தாக்கியதாகவும் கூறப்பட்டது.
இதுதொடர்பாக தாசில்தார் தரப்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், முக அழகிரி உள்ளிட்ட 21 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. ஆனால், தற்போது 17 பேர் மட்டுமே உள்ளனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. மு.க.அழகிரிக்கு ஜாமீன் கிடைத்ததால், அவ்வப்போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர்.
இந்த சூழலில், கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்த விசாரணை, அண்மையில் முடிவடைந்தது. இதனால், இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி, இந்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என தெரிவித்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேர் மதுரை மாவட்ட முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், அவர்களை விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துலெட்சுமி தீர்ப்பு வழங்கினார்.