• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தூய காதலுக்காக துளு மொழியை கற்றுக்கொண்ட காதலன் சித்து!

கலர்ஸ் தமிழ் சேனலில் திருமணம் என்ற நிகழ்ச்சியில் ஜோடியாக நடித்து வந்த சித்து – ஸ்ரேயா அஞ்சன் ஜோடி தான்.. ரீலிலும், ரியலிலும் பல ரசிகர்களை கவர்ந்த ஜோடி என்று கூறலாம். சமீபத்தில் காதலர் தினத்தை கொண்டாடிய நடிகை ஸ்ரேயா அஞ்சனிடம் இருவரது காதல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்ரேயா, ‘கலர்ஸ் தமிழின் திருமணம் தொடரில் நடித்த போது தான் எனக்கும் சித்துவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. சித்து நான் எப்படியெல்லாம் ஒரு கணவர் இருக்க வேண்டும் என்று நினைத்தேனோ அப்படியெல்லாம் இருக்கிறார். அதற்காகவே அவரை மிஸ் செய்யக்கூடாது என்று நினைத்தேன். திருமணத்திற்கு பிறகு எங்கள் வாழ்க்கை இன்னும் அழகாக சென்று கொண்டிருக்கிறது. நான் ஷூட்டிங் முடித்து வரும் நேரம் சித்து ஷூட்டிங் கிளம்பி விடுவார். நான் ஷூட்டிங் போகும் போது தான் அவர் வருவார். இருந்தாலும் எங்களுக்கான நேரத்தை நாங்கள் சரியாக ஒதுக்கிக் கொள்வோம். எங்களின் காதல் வீட்டுக்கு தெரிந்து இருவீட்டார் சம்மதம் வாங்கிய பிறகும், துளு மொழி கற்றுக்கொண்டுதான் என் வீட்டில் வந்து பெண் கேட்பேன் என்று சொல்லி அதனை கற்றுக்கொண்ட பின் தான் பெண் கேட்டார். சித்து எனக்காக இது போல பல விஷயங்களை  செய்துள்ளார்’ என கண்களில் காதல் கொப்பளிக்க ஸ்ரேயா அஞ்சன் கூறினார்..