• Mon. May 6th, 2024

லவ் திரை விமர்சனம்

Byஜெ.துரை

Jul 27, 2023

ஆர்.பி. பாலா இயக்கத்தில் அவரே சொந்தமாக தயாரித்துள்ள திரைப்படம் லவ். பரத், வாணி போஜன், விவேக் பிரசன்னா, ராதாரவி, டேனியல் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

காஃபி ஷாப்பில் தொடங்கும், முதல் காட்சியிலேயே வாணி போஜனை சந்திக்கிறார் பரத். முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் பிடித்துப்போக இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். பரத் பிஸினஸில் தோற்றுக்கொண்டே இருப்பதால் பரத்தை திருமணம் செய்ய வேண்டாம் என வாணி போஜனை எச்சரிக்கிறார் ராதாரவி.

ஆனாலும் பரத் மீதான நம்பிக்கையில் திருமணம் செய்ய முடிவு செய்து திருமணமும் நடைபெற்றது. இருவரும், தனது மகளுக்கு(வாணி போஜன்) ராதாரவி அன்பளிப்பாக கொடுத்த பிளாட்டில் குடியேறுகின்றனர்.

பிஸினஸில் செட்டில் ஆகும் வரை குழந்தை வேண்டாம் என்ற பரத்தின் முடிவுக்கு வாணி போஜன் ஒ.கே சொல்கிறார்.

அடுத்த காட்சியில் கதை ஒரு வருடத்திற்குப் பிறகிருந்து தொடங்குகிறது. வாணி போஜன் கர்ப்பமாக, பரத் மதுவுக்கு அடிமையான நிலையில் விரக்தியுடன் காணப்படுகிறார். திடீரென இருவருக்கும் சண்டை வர பரத், வாணிபோஜனை தள்ளிவிடுகிறார்.

அந்த எதிர்பாராத விபத்தில் வாணிபோஜன் இறந்துவிட, அடுத்து என்ன நடக்கிறது என்பது தான் கதை.

எமோஷனலாக நடக்கும் க்ரைம்களுக்குப் பின்னணியில் ‘லவ்’ படத்தின் கதை நகரும் என எதிர்பார்த்திருந்தால், அதுதான் இல்லை

சரி த்ரில்லர் என நினைத்தால் அதுவும் கிடையாது. அப்படியானால் கொலை செய்துவிட்டு, தப்பிவிடும் பரத்தை தேடுவதும், அதன் பின்னணி என்னவாக இருக்கும் என துப்பறியும் திரைக்கதை என நினைத்தால் அங்கேயும் ரசிகர்களுக்கு ஏமாற்றம்.

அப்படியானால் வாணிபோஜன் என்ன ஆனார். அவரை கொலை செய்த பரத் தப்பினாரா என எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார் இயக்குநர்.

இதனிடையே விவேக் பிரசன்னா, டேனியல் இருவரும் ஏன் வந்தார்கள் எதற்கு வந்தார்கள் என்று புரியாத புதிராக இருந்த ரசிகர்கள் சரி எதாவது நடக்கும் என பொறுமை காத்த ரசிகர்களுக்கு அங்கேயும் ஏமாற்றம் தான். முடிவில் பரத் – வாணி போஜன் இடையே என்ன பிரச்சினை ஏன் அந்த கொலை என கட்டவிழ்க்கும் இடத்தில் ரசிகர்களுக்கு ஒரு சோப்பு டப்பாவை பரிசளிக்கிறார் இயக்குநர்.

கணவன், மனைவி உறவுகளிடையே நடக்கும் சண்டை விபரீதமாக மாறுகிறது என்று அவர் மனதில் நினைத்த கதையை ரகசியமாக மனதோடு வைத்து கொண்டார். கடைசி வரை திரையில் காட்டவில்லை. அந்த அளவுக்கு ரகசியம் காத்துள்ளார் இயக்குனர்.

படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை பார்க்கும் போது ரசிகர்களின் நரம்பு முறுக்கு ஏறுவதை கண்கூடாக பார்க்கலாம். இசை, பாடல்கள், எடிட்டிங், சினிமோட்டோகிராபி என அனைத்துமே விடை இல்லா விடுகதை.

மொத்தத்தில் பரத்தின் 50வது திரைப்படமான லவ் திரை படம் பார்பவர்களுக்கு சோப்பு டைப்பா இலவசம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *