• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை மாவட்டத்தில் லாட்டரி டிக்கட்டுகள் பறிமுதல்- 22 பேர் கைது

ByKalamegam Viswanathan

May 22, 2023

மதுரை மாவட்டத்தில் சுமார் 5,72,200 ரூபாய் மதிப்பிலான லாட்டரி டிக்கட்டுகள் பறிமுதல்; 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
மதுரை மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கடை, அப்பன்திருப்பதி, கொட்டாம்பட்டி, திருமங்கலம், உசிலம்பட்டி, M.சுல்லுப்பட்டி, அலங்காநல்லூர், வாடிப்பட்டி ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கட்டுகள் விற்பனை செய்த 22 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 5,72,200 ரூபாய் மதிப்பிலான 7670 லாட்டரி டிக்கட்டுகளும் ரூபாய்.23610 பணமும் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், மதுரை மாவட்டத்தில் இது போன்று சட்டவிரோதபாக தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.