• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மக்களவை ஒத்திவைப்பு…நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சலசலப்பு

Byகாயத்ரி

Nov 29, 2021

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி டிசம்பர் மாதம் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் பல்வேறு அமர்வுகளிலும் பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. குறிப்பாக, 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி., மணீஷ் திவாரி உள்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை சமர்ப்பித்தனர்.


இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி., மணீஷ் திவாரி, “வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் பதிவை உருவாக்க வேண்டும். அவர்களது குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.


இதேபோல், “போராட்டத்தின்போது கடந்த ஓராண்டில் உயிரிழந்த 700 விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி” மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை அளித்தார் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர்.தொடர்ந்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., பினோய் விஸ்வம், ரவிக்குமார் எம்.பி. உள்ளிட்டோர் பல்வேறு விவகாரங்களை வலியுறுத்தி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்து உள்ளனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர தொடங்கிய சிறிது நேரத்தில் எதிர்க்கட்சிகள் 17 கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களவையில் முழக்கம் எழுப்பினர். சபாநாயகர் இருக்கியை முற்றுகையிட்டனர். இதை தொடர்ந்து மக்களவை இன்று நண்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டது.