• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கோவையில் உடல்பருமனை கட்டுப்படுத்த கோரி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தின் லோகோ வெளியீட்டு விழா நிகழ்ச்சி

BySeenu

Jun 21, 2024

கோவையில் உடல்பருமனை கட்டுப்படுத்த கோரி, 4வது ஆண்டாக நடைபெற உள்ள மாரத்தான் ஓட்ட பந்தயத்தின் லோகோ வெளியீட்டு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதனை கோவை மாநகர ஆணையர் பாலகிருஷ்ணன் வெளியிட்டார்.

கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள விஜிஎம் மருத்துவமனை சார்பாக கடந்த 2017,18,19, ஆகிய மூன்று ஆண்டுகள் தொடர்த்து உடல் பருமனால் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை பொதுமக்களுக்கு எடுத்து கூறும் வகையில் சிறப்பு மாரத்தான் ஓட்ட பந்தயம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு இதன் தொடர்ச்சியாக 4வது ஆண்டாக உடல் பருமன் குறித்து பொதுமக்களுக்கு மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாரத்தான் ஓட்ட பந்தயம் வரும் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி காலையில் கோவை வ உ சி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் வெளியீடு மற்றும் லோகோ வெளியீட்டு விழா நிகழ்ச்சி இன்று விஜிஎம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் குத்துவிக்கேற்றி வைத்ததுடன், ரிப்பன் வெட்டி இதற்கான லோகோவை வெளியிட்டார்.

மேலும் இது குறித்து விஜிஎம் மருத்துவமனையின் தலைவர் மோகன் பிரசாத், கூறும் பொழுது..
ஆண்டு தோறும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் விஜிஎம் ரன் பார் நேஷன் எனும் தலைப்பில் உடல் பருமன் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்ட பந்தயம் நடத்துவது வாடிக்கை இதன் 4ம் ஆண்டான இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி நடந்த திட்டமிட்டுள்ளதாகவும், இதில் சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்ள வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். இந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு 1லட்சம் பணம், பதக்கங்கள் சீறுடை, உணவு, உள்ளிட்டவைகள் வழங்க படும் என்றார். மேலும் ஏழை எளிய மாணவிகளுக்கு விளையாட்டின் போழுது ஏற்படும் மூட்டு நுண்துளை அறுவை சிகிச்சைகளை நமது மருத்துவமனையில் இலவசமாக வழங்க உள்ளதாகவும் இதற்காக ரோட்டரி க்ளப் ஆப் டவுன். டவுன் மூலமாக நடத்த உள்ளதாக கூறினார். மேலும் இந்த ஆண்டு கூடுதலாக மாரத்தான் போட்டியில் கூடுதல் சிறப்பாக 100 வீல் சேர் மாரத்தான் போட்டியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியன் பொழுது விஜிஎம் மருத்துவமனை மருத்துவர்களான சுமன், வம்ஷி, கோகுல், மதுரா, மீத்ரா, மற்றும் கோவை அத்லெட்டிக் கிளப் சார்பாக சீனிவாசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.