கோவை யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186 மூலம் குட்டி ரோடீஸ் – 23 என்ற குழந்தைகளுக்கான பிரத்யேகமாக நடத்தப்படும் ஒரு மெகா சைக்கிள் போட்டி கோவை கொடிசியாவில் நடைபெற்றது.
ரவுண்ட் டேபிள் இந்தியா 2008-ல் சமூக நோக்கத்துக்காக தொடங்கப் பட்டது. குட்டி ரோடீஸ் முதல் பதிப்பு 2019-ல் நடத்தப்பட்டது. அதன் இரண்டாவது பதிப்பிற்காக 2023-ல் மீண்டும் பங்கேற்கிறது. இதில் நிதி திரட்டும் நிகழ்வில் முழு வருமானமும் சமூக சேவை நடவடிக்கைகளுக்கு செல்கிறது. ரவுண்ட் டேபிள் இந்தியாவால் இயக்கப்படும் முதன்மையான காரணங்களில் ஒன்று கல்வி. நமது சமூகத்தில் பின்தங்கிய குழந்தைகளின் உள்கட்டமைப்பு மற்றும் பள்ளிக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ரவுண்ட் டேபிள் இந்தியா (ஆர்.டி.ஐ.) இந்தியா முழுவதும் உள்ள 3,616 பள்ளிகளில் 8,665 வகுப்பறைகள் ரூ.437 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளன. இந்த வகுப்பறைகளால் 95.3 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பயனடைந்துள்ளனர். அதாவது சராசரியாக இந்த அமைப்பு மூலம் இந்தியாவில் ஒரு நாளைக்கு 1 வகுப்பறைக்கு மேல் கட்டப்பட்டுள்ளது. குட்டி ரோடீஸ் நிதி திரட்டலின் முதல் பதிப்பு ரூ. 2,00,000 வசூல் செய்தது, இரண்டாவது பதிப்பு ரூ.10,00,000 இலக்கை நிர்ணயித்துள்ளது. குட்டி ரோடீஸ் 23 இல் பங்கேற்க சுமார் 1,000 குழந்தைகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக கோவை வடக்கு போலீஸ் துணை போலீஸ் கமிஷனர் ஜி.சந்தீஷ் கலந்து கொண்டார். கோவை யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186 – தலைவர் கார்த்திக் மணிகண்டன், செயலாளர்சதீஷ் கிருஷ்ணா, பொருளாளர் புளூவின் ஜோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.