• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் மக்கள் தொடர்பு முகாமில் சாக்கடை கால்வாய் மற்றும் சாலை அமைக்க பட்டியலின மக்கள் கோரிக்கை

ByP.Thangapandi

Jul 31, 2024

உசிலம்பட்டி அருகே மக்கள் தொடர்பு முகாமில் சாக்கடை கால்வாய் மற்றும் சாலை அமைக்க பட்டியலின மக்கள் கோரிக்கை வைத்த சூழலில், அரை கிலோ மீட்டர் நடந்தே சென்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆய்வு செய்து உடனடி தீர்வு ஏற்படுத்தியது பலரின் பாராட்டை பெற்றுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குறவடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, கூடுதல் ஆட்சியர் மோனிகா, உதவி ஆட்சியர் ( பயிற்சி ) வைஷ்ணவி, உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், கோட்டாச்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த முகாமில் 231 பயனாளிகளுக்கு 2.16 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வை மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா துவக்கி வைத்தார்.

குறவடி கிராமத்தில் உள்ள பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் முறையான சாக்கடை கால்வாய் மற்றும் சாலைகள் இல்லை எனவும், ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் பெரும் அவதியுற்று வருவதாக கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உடனடியாக சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவிற்கு நடந்து சென்று பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளை ஆய்வு செய்து உடனடியாக சாலை மற்றும் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

பொதுமக்கள் வைத்த கோரிக்கைக்கு மாவட்ட ஆட்சியர் உடனடியாக ஆய்வு செய்து தீர்வை ஏற்படுத்தியது பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.