• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அன்னதானம் வழங்கப்படும் கோவில்களின் பட்டியல்..!!

ByA.Tamilselvan

Oct 7, 2022

சென்னையில் ஒரு மாத காலத்திற்கு அன்னதானம் வழங்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார். இதைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெறும் நாள் மற்றும் இடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
நாளை (8-ந்தேதி) வரை-வசந்த மண்டப அறக்கட்டளை, எண்.90, நைனியப்பநாயக்கன் தெரு, சென்னை (கந்தக்கோட்டம் முத்துக்குமாரசுவாமி கோவில் அருகில்) வருகிற 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை-மயிலாப்பூர் மாதவப் பெருமாள் கோவில். 12-ந்தேதி முதல் 14-ந் தேதி வரை- வாசவி மகால், கிருஷ்ணப்ப அக்ரஹாரம் தெரு, ஜார்ஜ் டவுன். Also Read – மாணவர்களே தயாரா..!! வரும் 15-ம் தேதி மாதம் ரூ. 1,500 ஊக்கத்தொகைக்கு தேர்வு..!! advertisement 15-ந்தேதி முதல் 17-ந் தேதி வரை-குறுங்காலீஸ்வரர் மற்றும் வைகுண்ட வாசப் பெருமாள் கோவில், கோயம்பேடு. 18-ந்தேதி முதல் 20-ந் தேதி வரை-பட்டினத்தார் கோவில் மண்டபம், திருவொற்றியூர். 21-ந்தேதி முதல் 23-ந் தேதி வரை-காரணீஸ்வரர் கோவில், சைதாப்பேட்டை. 24-ந்தேதி முதல் 26-ந் தேதி வரை- சீனிவாச பெருமாள் கோவில் மண்டபம், சூளை. 27-ந்தேதி முதல் 29-ந் தேதி வரை-சக்தி விநாயகர் கோவில், கே.கே.நகர். 30-ந்தேதி முதல் அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந்தேதி வரை- சீயாத்தம்மன் கோவில் மண்டபம் கொரட்டூர். நவம்பர் 2-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை-பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில் திருமண மண்டபம், கோட்டூர்புரம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.