மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில அளவில் இரண்டாவது மாநாடு 21.08.2025ல் நடை பெறுவதை முன்னிட்டு அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொருட்டு அப்பகுதிகளில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லரை விற்பனை கடைகள் (FL- 1) மற்றும் உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள்(FL-2) ஆகியவை 21.08.2025 அன்று ஒரு நாள் மட்டும் மூடப்பட்டு இருக்கும்.

மேற்படி தினத்தில் கீழ்க்காணும் மதுபானக்கடை மற்றும் பார்களில் மதுபான சில்லரை விற்பனை எதுவும் நடைபெறாது என மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன்குமார், இ.ஆ.ப., தெரிவிக்கிறார்கள்.