குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழாவின் வருகையை உணர்த்தும். சாலை ஓரங்களில் சின்னதும்,பெரியதுமாக. இறை இயேசு மாட்டுக் கொட்டகையில் பிறந்தார் என்பதின் அடையாளம் காட்டும் குடில்களின் வரிசை.

சின்னதும் ,பெரியதுமாக மரக்கிளைகளில் நட்சத்திரங்கள் வந்து குடிபுகுந்ததை போன்ற ஒளி விளக்குகள். குமரி மாவட்டமே,இறையேசுவின் பிறப்பு தினமான கிறிஸ்துமஸ்யை எதிர் நோக்கியிருக்கும் சூழலில்.
நாகர்கோவில் சுங்கன்கடை பகுதியில் உள்ள வின்ஸ் குருபாப்
வின்ஸ் பொறியியல் கல்லூரி, வின்ஸ் சி.பி.எஸ்.ஈ.,பள்ளிவாளாகமெங்கும்
ஒளி விளக்குகளின் வானவில்லின் தோற்றத்தில். ‘கிறிஸ்துமஸ் ஈவ்’ விழா தொடங்கியது.
சின்னம் சிறுவர்கள் பட்டம் பூச்சிகள் போன்ற தோற்றத்தில் உலாவர,கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் கூட்டமாக ஆட்டம் ஆடிவர.

ராஜம் அவைகூடத்தில் உயரமான கிறிஸ்துமஸ் மரத்தின் முன் கல்லூரி தாளாளர், முன்னாள் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் நாஞ்சில் வின்சென்ட்,குமரி குழித்துறை மறைமாவட்டம் ஆயர் ஆல்பர்ட்.ஜி.ஏ.அனஸ்தாஸ், கன்னியாகுமரி சட்டமன்ற
அ.தி.மு.க. உறுப்பினர் தளவாய் சுந்தரம்,அருட்பணி பாளர்கள் பள்ளி மாணவர்கள் கை ஒலி எழுப்பி கிறிஸ்துமஸ் மரத்தின் ஒளியின் மின்னல் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
மேடையில் முதல் காட்சியாக. கன்னி மேரி மும்,சூசையப்பரும் பெத்லகேம் நோக்கிய பயணம், மாட்டுத் தொழுவம், இறை தூதர்கள் மூன்று ராஜக்களுக்கு வழி காட்டும் காட்சிகளாக நகர்ந்தன.
குழித்துறை மறைமாவட்டம் ஆயர் மேதகு ஆல்பர்ட்.ஜி.ஏ. அனஸ்தாஸ் இறைவேட்டலுடன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
எளிய ஆதரவற்ற பெண்கள் 100_பேருக்கு. கிறிஸ்துமஸ் விழாவின் சார்பாக
கேக் மற்றும் சேலைகளை. யாரும், தளவாய் சுந்தரமும் வழங்கினார்கள்.

தளவாய் சுந்தரம் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளுடன். நண்பர் நாஞ்சில் வின்சென்ட் தலைவர் எம்ஜிஆர் இடத்தில் அரசியல் பாடம் கற்றவர். தலைவரின் கொடை வள்ளல் தன்மை இவருக்கும் ஏற்படுவது இயல்பு.
கிறிஸ்துமஸ் விழா ஒரு சமயத்திற்கு மட்டுமேயான விழா அல்ல. உலகமெங்கும் வாழும் மக்களின் விழா. இருப்போர், இல்லாதவர்களுக்கு அன்பளிப்புகள் கொடுத்து விழாநாளில் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் இருக்கும் நிலையை இந்த கிறிஸ்துமஸ் நாளில் நாஞ்சில் வின்சென்ட் பிறப்பித்துள்ளார்.
நாஞ்சில் வின்சென்ட் எப்போதும் பிறர் துன்பம் கண்டு உதவும் உள்ளம் கொண்டவர். சுனாமி பேரழிவின் போதும் மழை வெள்ளம் பாதிப்பால் பாதிக்கப்பட்ட கோவளம் மீனவ கிராமங்களும் அவர் நேரில் சென்று உதவியதை அருகில் இருந்து நானே பார்த்திருக்கிறேன் என தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.




