• Tue. Mar 31st, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

முதலமைச்சர் சாதனைகளை எடுத்து கூறி வாக்காக மாற்றி வெற்றி பெறுவோம்- செந்தில் பாலாஜி..,

BySeenu

Mar 30, 2026

கோவை, நஞ்சப்பா சாலையில் உள்ள செம்மொழி பூங்கா அருகே தி.மு.க கோவை தெற்கு தொகுதி தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அமைச்சரும், தெற்கு சட்டமன்றத்தொகுதி வேட்பாளருமான செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது :

தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் போட்டியிட அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகளை தொடர்வதற்காக அலுவலகத்தை திறந்து வைத்ததாகவும், வரக் கூடிய ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் கோவையில் இருக்கக் கூடிய 10 தொகுதிகளுக்கும் திராவிட முன்னேற்ற தலைமையிலான, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறுவதற்கான பணிகளை நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தொடங்கி உள்ளதாகவும், குறிப்பாக ஓர் அணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் உடைய சிறப்பு திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முன்னெடுத்து வாக்காளர் பட்டியல் ஒவ்வொரு வீடாக சென்று சரிபார்த்து “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கையை முன்னெடுப்புக்கு பிறகு பல்வேறு சிறப்பு திட்டங்களை மக்களுக்கு சிறப்பான திட்டங்களை சிறப்பாக மக்களுடைய எண்ணம் மீண்டும் தமிழகத்தில் இரண்டாவது முறையாக தளபதி அவர்கள் ஆட்சி பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று உறுதியோடு இருப்பதாகவும், அந்த வகையில் கோவையில் வாக்காளர் பெருமக்கள் கோவையில் மகத்தான வெற்றியை வழங்கவும் தயாராக இருப்பதாகவும், தன்னைப் பொருத்தவரை 2006 ஆம் ஆண்டு கரூர் தொகுதியில் போட்டியிட்டு வந்ததைத் தொடர்ந்து கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட தளபதி அவர்கள் வாய்ப்பை தந்து உள்ளதாகவும், நான் பார்க்கும் பொழுது கோவையில் கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்து இருப்பதாகவும், இந்த முறை கோவையில் மகத்தான வெற்றி தர வேண்டும்.

அதற்கான வாய்ப்பாக எங்கள் கழகத் தலைவர் வழங்கி உள்ளதாகவும், எனவே இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி கோவை மாவட்டம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியை பெறுவதற்கான பணிகளை மிக வேகமாக முன்னெடுத்து மகத்தான வெற்றியை நாங்கள் பெறுவோம் என்றார்.

கோவை அ.தி.மு.க தெற்கு தொகுதி வேட்பாளர் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதாக கூறி உள்ளார். என்பது அதுகுறித்தான கேள்விக்கு?

அவர்கள் எப்படி ? சொல்லுவார்கள் தோற்று விடுவார்கள் என்று சொல்வார்களா? அவர்களுடைய கருத்துக்களை அவர்கள் கூறுகிறார்கள். நிச்சயமாக தமிழ்நாட்டு மக்களுடைய எண்ணங்கள் அவர்களுடைய சிந்தனைகள் குறிப்பாக கோவை மக்களின் எண்ணங்கள் சிந்தனைகள் பல்வேறு இடங்களில் பல்வேறு கருத்துக்கணிப்புகள் நடத்தி இருப்பீர்கள் நேற்றைய தேர்தல் அறிக்கையில் முதல்வர் அவர்கள் கோவைக்கு வரும்பொழுது கோவை மாவட்டத்திற்கு இருக்கக் கூடிய பம்ப் செட்டு உற்பத்தியாளர்கள் எங்களுடைய தொழிலை பாதுகாப்பு என்ற வகையில் சிறப்பு திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர். அதை முன் வைத்தார்கள் அதை ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் அவர்கள் நேற்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாய மின் விளக்குகளுக்கு குறிப்பாக புதிய பாம்பு செட் வழங்கப்படும் என்று ஒரு மகத்தான தேர்தல் அறிக்கையை வழங்கி உள்ளதாகவும், இதில் இரண்டு வகை ஒன்று விவசாயிகள் பயன் பெறுவது,

இரண்டாவது கோவை மாவட்டத்தில் இருக்கக் கூடிய பம்ப் செட் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கூடிய மிகப்பெரிய அறிவிப்பாக பார்ப்பதாகவும், நேற்று தொழில் முனைவர் பேசுகின்ற போது இரண்டு மனுக்கள் கொடுத்ததாகவும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை இப்படி மகத்தான அறிவிப்பு தேர்தல் அறிவிப்பில் வரும் என்று ஒவ்வொரு திட்டங்களையும் பார்த்து, பார்த்து செயல்படுத்தி உள்ளதாகவும், அறிக்கையும் கொடுத்து உள்ளதாகவும் எனவே கோவை மாவட்டத்தில் உள்ள தொழில் வளத்தை பாதுகாக்கின்ற முதல்வராக தமிழக முதல்வர் இருக்கிறார் என்றும், திராவிட மாடல் 2.0 வில் நிச்சயமாக கோவை மாவட்டம் வளர்ச்சி பெறும் என்றார்.

கரூரில் தோற்று விடுவார் என்பதால் இங்கு வந்து உள்ளார் என்று முன்னாள் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியது குறித்தான கேள்விக்கு?

கோவை தெற்கில் நின்றவர்கள் ஏன் ? கோவை வடக்கிற்கு சென்றார்கள், தெற்கில் அ.தி.மு.க வேட்பாளர் அறிவித்து உள்ளார்கள். அப்பொழுது அவர்களுக்கு இல்லை என்று தான் அர்த்தம், வேட்பாளர் வடக்கு போடவில்லை, வடக்கு பி.ஜே.பி க்கு கொடுத்து உள்ளார்கள், அப்ப யாரு ? வேட்பாளராக இருக்கும் தெற்கில் இருந்தவர்கள் ஏன் ? வடக்கு சென்றார்கள் என்று அந்த கேள்வியை அவர்களிடம் கேட்க வேண்டும் என்றார்.

நான் எப்பொழுதும் தேர்தல் களத்தை பொருத்தவரை பயந்ததும் இல்லை, பின்னோக்கிப் போனதும் இல்லை, கரூரில் எம்.எல்.ஏ வாக இருந்தேன். அரவக்குறிச்சியில் அங்கேயும் தேர்தலில் வெற்றி பெற்றேன். திரும்பவும் கரூரில் வந்து வெற்றி பெற்றேன். பின்னர் தற்பொழுது கோவை பொறுத்தவரை எங்களுடைய கழகத் தலைவருடைய வழிகாட்டுதலின்படி கோவையிலே அரசினுடைய பணிகளையும், மீண்டும் என்னுடைய பணிகளையும் முன்னெடுத்து அனைத்து பணிகளையும் நன்கு அறிவேன் கோவையை பொறுத்தவரை எனது சொந்த உழைப்பால் மக்கள் என்னை அன்போடு உபசரித்திருக்கிறார்கள் என்றும், இந்த இலக்கை நோக்கி போவதற்கு அன்போடு பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். நிச்சயமான வெற்றியை பெறுவோம் என்றார்.

தேர்தல் அறிவிப்புகளை மக்களிடம் சேர்க்க எந்த ? மாதிரி உத்திகளை மேற்கொள்கிறீர்கள் என்ற கேள்விக்கு?

உத்திகள் உங்களிடம் சொல்லிவிட்டால் அது உத்திகள் கிடையாது.

அ.தி.மு.க கோட்டை என்று கூறிக் கொண்டு உள்ளார்கள். அதை தி.மு.க-வின் பக்கம் மாற்றுவதற்கு என்ன செய்யப் போகிறீர்கள் ? என்ற கேள்விக்கு?

2021 சட்டமன்றத் தேர்தலில் ஒரு பகுதியில் ஆயிரம் ஓட்டு, இன்னொரு தொகுதியில் 1,700 ஓட்டு மற்ற தொகுதியில் 4,000 ஓட்டை இன்னொரு தொகுதியில் 2,000 ஓட்டு, இன்னொரு தொகுதியில் 10,000 ஓட்டுக்கள் என்றும், 2021 தேர்தலுக்குப் பின் அண்ணா.தி.மு.க வளர்ந்து உள்ளதா ? என்ற கேள்வி எழுப்பியவர், 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் அண்ணா.தி.மு.க வளர்ச்சி பெற்று இருக்கிறதா ? லட்சக்கணக்கான மக்கள்கள் அந்த இயக்கத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து உள்ளார்களா ? எதன் அடிப்படையில் அண்ணா.தி.மு.க கோட்டை என்று அவர்கள் கூறுகிறார்கள் ? என்ற கேள்வியை அவர்களை பார்க்கும் பொழுது கேளுங்கள் என்று கூறினார்.

தேர்தலுக்குப் பிறகு உங்களுடைய உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு கூடி இருக்கிறது. எவ்வளவு பேர் உங்கள் இயக்கத்தில் சேர்ந்து உள்ளார்கள் ? வளர்ச்சி அடைந்து உள்ளதா ? உங்கள் கட்சி என்று அவர்களிடம் கேள்வி எழுப்பினால் பதிலளிப்பார்கள்.

வழக்கமாக கூறுகின்ற வார்த்தை அது அண்ணா.தி.மு.க கோட்டை என்பது அதை உள்ளாட்சித் தேர்தலை நாம் பார்த்தோம், நாடாளுமன்ற தேர்தலையும் பார்த்தோம், மக்கள் எப்படி ? வாக்களித்தார்கள் என்று உள்ளாட்சி தேர்தலில் வெற்றி, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் கோவையில் வெற்றி தொடரும் என்றார்.

கோவை தெற்கு தொகுதிக்கான பிரதான வாக்குறுதிகள் ஏதாவது உள்ளதா ? என்ற கேள்விக்கு பதில் அளித்தவர்

ஒரே நாளில் எல்லாத்தையும் சொல்லிவிட்டால் செய்திக்கு சுவாரஸ்யம் இருக்காது, எடுக்கக் கூடிய பணிகளுக்கு சிறப்பு இருக்காது என்றும், அலுவலகம் திறந்து உள்ளதாகவும், நிறைய திட்டங்கள் முன்னெடுக்க உள்ளதாகவும், குறிப்பாக கோவையின் தெற்கு தொகுதிக்கு சிறப்பு கவனம் செலுத்த உள்ளதாகவும், செம்மொழி பூங்கா முதல்வர் திறந்து வைத்து உள்ளார் என்றும், இன்னும் பல வளர்ச்சி திட்டங்களை கொடுக்க உள்ளதாக கூறினார்.

கோவைக்கான திட்டங்களை தி.மு.க செயல் படுத்தவில்லை என்று அ.தி.மு.க குற்றச்சாட்டு வைத்து உள்ளது அதை எப்படி ? தி.மு.க எதிர்கொள்ள போகிறது குறித்தான கேள்விக்கு ..

விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிதி கொடுத்து நிலத்தை எடுத்தவர்கள் தி.மு.க அரசாங்கம் எங்களுடைய முதல்வர், அதேபோல் ஜி.டி நாயுடு மேம்பாலம் அவிநாசி சாலையில் கட்டி முடித்து திறந்து வைத்தது எங்களது முதல்வர், செம்மொழிப் பூங்காவை முடித்து திறந்து வைத்தது எங்களது முதல்வர், தங்க நகை உற்பத்தியாளர்கள் கோரிக்கையை முன்வைத்து அதற்கான பூங்காவை திறப்பதற்கான பணிகளை தொடங்க வைத்தது எங்களது முதல்வர், இப்படி தொடர்ச்சியாக இன்னும் கூட ஒரு சிறப்பு கோவை மாநகராட்சியில் இந்த ஐந்து ஆண்டுகளில் 8,700 கோடி ரூபா வளர்ச்சி திட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாகவும், ஏதாவது சொல்லுகின்ற பொழுது எந்தெந்த திட்டங்கள் எப்பொழுது வந்தது என்று மறு கேள்வி கேட்டால் அவர்கள் பதில் கூறுவார்கள் என்றார்.

அ.தி.மு.க, பா.ஜ.க வினரிடமும் கேளுங்கள் அவர்கள் கூறுகிறார்களா ? என்று ஏதாவது சொன்னால் அதற்கு நாங்கள் பதில் கூறுகிறோம் என்றார்.

டி.வி.கே உங்களுக்கு போட்டி உள்ளதா ? உங்கள் பெயரில் செந்தில்குமார் என்ற வேட்பாளர் உள்ளார் என்பது குறித்தான கேள்விக்கு …

ஒவ்வொரு கட்சியும் தேர்தல் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் தான் வேட்பாளர்களை அறிவிப்பார்கள், தேர்தல் களத்திற்கு செல்வார்கள், வெற்றி யாருக்கு ? என்பது வாக்காளர் பெருமக்கள் தீர்மானிப்பார்கள், நாங்கள் முன்னெடுப்பது எங்கள் முதல்வருடைய சாதனைகளை சொல்லி வாக்குகளை சேகரிக்கிறோம், பயன்பட்ட மக்களுடைய இடத்தில் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று ஆதரவு கேட்பதாகவும், அரசு திட்டத்தின் மூலமாக பயன் பெற்றவர்கள் அரசின் திட்டத்தின் மூலம் தொடர்ந்து பயன்பெறக் கூடியவர்கள் இவைகளை முன்னெடுத்து எங்களுடைய வாக்காளர்களாக மாற்ற இருப்பதாக கூறியவர், நிச்சயமாக நீங்கள் பொறுத்து இருந்து பாருங்கள் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கையை அப்பொழுது பார்ப்பீர்கள் எப்படி ? இருக்கும் என்று கோவை யாருடைய கோட்டை என்பது தெரியும் என்றார்.

கோவை தெற்கு தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதாக அ.தி.மு.க வேட்பாளர் தெரிவித்தது குறித்தான கேள்விக்கு?

கடந்த முறை அவர்கள் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்கள், அதற்குப் பின்பு அவர்கள் கட்சி எவ்வளவு ? வளர்ந்து இருக்கிறது. யார் ? யார் ஓட்டு போடுவார் ? கொஞ்சம் பார்க்கச் சொல்லுங்கள், களம் எப்படி ? உள்ளது யார் ? வாக்களிப்பார் மக்கள் மனநலம் எப்படி ? இருக்கிறது என்று பார்க்க சொல்லுங்கள் என்றவர், ஊர்வலம் கூட்டிச் சென்றால் நான் கூட கூறலாம் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறலாம் இருக்கின்ற வாக்குகளை ஒரு லட்சத்து 86 ஆயிரம், ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றால் நம்ப முடியுமா ? இருக்காது இல்லை, யதார்த்தமாக சொல்லலாம், அவர்கள் அவர் கருத்துகளை முன் வைக்கிறார்கள். அதனால் தான் அவர்களது நிர்வாகிகளை தைரியப்படுத்த முடியும், தென்புபடுத்த முடியும் அதனால் அந்த கருத்துக்களை சொல்வதாகவும், நான் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை, யாரையும் நான் உதாசனப்படுத்தவில்லை, அதற்காக தலைவர் என்னை அனுப்பி வைக்கவில்லை நாங்கள் முதல்வரின் சாதனையை மக்களிடத்தை கொண்டு செல்கிறோம், அதை வாக்குகளாக மாற்றி திராவிட முன்னேற்ற கழகம் பணிகளை முன்னெடுக்கிறோம் என்றார்.

பிரச்சாரம் நாளை மாலை தொடங்கும் என்றார் .

இந்த நிகழ்வின்போது, கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன், வடக்கு மாவட்ட செயராளர் தொண்டாமுத்தூர் ரவி, முன்னாள் அமைச்சர்கள் மு.கண்ணப்பன், பொங்கலூர் பழனிச்சாமி, கூட்டணி கட்சி தலைவர்கள் காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், மதிமுக ஆர்ஆர் மோகன் குமார், தந்தை பெரியார் திராவிடர் கழகம் கு.இராமகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் இராமமூர்த்தி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தனபால் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.