மதுரை திருப்பரங்குன்றம் அடுத்துள்ள ஹார்விபட்டி பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக மதநல்லிணக்க பிரச்சார பேரணி ஹார்விப்பட்டி கலையரங்கத்தில் தொடங்கி திருநகர் இரண்டாவது விருத்தம் வரை மத நல்லிணக்கம் காப்போம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் என்கிற தலைப்பில் நடைபெற இருந்தது.

இதில் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி உட்பட 50க்கும் மேற்பட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஹார்விபட்டியிலிருந்து பேரணி துவங்க இருந்த நிலையில் அனுமதியின்றி நடைபயணம் மேற்கொள்ளக்கூடாது என காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மேலும் அதை மீறி நடை பயணம் மேற்கொண்டால் கைது செய்வோம் என காவல்துறை எச்சரித்தும் மத நல்லிணக்க பிரச்சார நடைபயணம் மேற்கொள்ள முயன்ற மாதர் சங்க நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றி அருகிலுள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் நடைபெற்ற வரும் சூழலில் மத நல்லிணக்க பிரச்சார நடைபயணம் மேற்கொள்ள இருந்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.




