• Tue. Apr 7th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

சட்டமன்ற மதிப்பீட்டு குழு, மதுரை மாவட்டத்தில் ஆய்வு..,

ByKalamegam Viswanathan

Nov 1, 2023

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன், தலைமையில் சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் ம.சிந்தனை செல்வன் (காட்டுமன்னார்கோயில்),
ச.சிவகுமார் (மயிலம்), செல்லூர் கே. ராஜு (மதுரை மேற்கு), கோ.தளபதி (மதுரை வடக்கு), வி.பி.நாகைமாலி (கீழ்வேளூர்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு), ஓ.எஸ்.மணியன் (வேதாரண்யம்), ஆகியோர் மதுரை மாவட்டம், வைகை ஆற்றில், சோழவந்தான் பகுதியில் உள்ள தடுப்பணையில் ஆய்வு மேற்கொண்டார்கள்.
உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, சட்டமன்றப் பேரவை செயலாளர், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர்வெங்கடேசன், உட்பட பலர் உள்ளார்கள்.
இதையடுத்து, சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், திருமால்நத்தம் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்றார்கள்.
உடன் மாவட்ட ஆட்சித் தலைவர், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), சட்டமன்றப் பேரவை செயலாளர், மாவட்ட வருவாய் அலுவலர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றன.