• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

வாக்களிக்க வசதியாக வடமாநில தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை

Byவிஷா

Apr 24, 2024

தமிழ்நாட்டில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள், தங்கள் மாநிலங்களில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வசதியாக ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தொழில் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்;ளது.
தமிழக தொழிலாளர் ஆணையர் ஏ.சுந்தரவல்லி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
மக்களவை பொதுத் தேர்தல் கேரளாவில் ஏப்.26-ம் தேதியும், ஆந்திராவில் மே 13-ம் தேதியும், கர்நாடகாவில் முதல்கட்டம் ஏப்.26-ம் தேதியும், 2-ம் கட்டமாக மே 7-ம் தேதியும் நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள், தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கர்நாடகா, கேரளா, ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் பணிபுரிகின்றனர்.
வாக்குரிமை உள்ள தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் அவர்கள் தம் சொந்த மாநிலத்துக்குச் சென்று வாக்களிக்க வேண்டியுள்ளது. இதற்கு ஏதுவாக தேர்தல் நாட்களில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.
தவறும் நிறுவனங்கள் மீது மாநில மற்றும் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
தொழிலாளர் இணை ஆணையர், மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர் தே.விமலநாதனை 944539880, 044-24335107 ஆகிய எண்களிலும், உதவி ஆணையர் சென்னை முதல் வட்டம் எம். வெங்கடாச்சலபதியை 7010275131, 044-24330354, 2-ம் வட்ட தொழிலாளர் உதவி ஆணையர் சுபாஷ்சந்திரனை 8220613777, 044-24322749, 3-ம் வட்ட உதவி ஆணையர் சிவக்குமாரை 9043555123, 044-4322750 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.
மாவட்ட கட்டுப்பாட்டறையில், முதல் வட்ட தொழிலாளர் துணை ஆய்வாளர் சி.விஜயலட்சுமியை 9840829835, 044-24330354, 6-ம் வட்ட துணை ஆய்வாளர் இ.ஏகாம்பரத்தை 9790930846, 044-24330354, 9-வது வட்ட துணை ஆணையர் ஆர்.வேதநாயகியை 9884264814, 044-24330354 எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் மு.வெ.செந்தில்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில்..,
தமிழகத்தில் பணிபுரியும் கர்நாடகா, கேரளா, ஆந்திராவில் வாக்குரிமை உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் வாக்களிக்க வசதியாக ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்காவிட்டால், இது தொடர்பான புகார்களை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள் எம்.வி.கார்த்திகேயன் – 9444221011, எஸ்.கமலக்கண்ணன் – 9884675712 என்ற எண்களிலும், இயக்குநர் அலுவலக ஆட்சி அலுவலர் எஸ். சூரியாவிடம் 9884470526 என்ற எண்ணிலும், துணை இயக்குநர் கே.சுவேதாவிடம் 9962524442 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.
மேலும், துணை இயக்குநர்கள் எஸ்.இளவரசன் (சென்னை மாவட்ட கட்டுப்பாட்டு அறை) – 7373278203, செங்கல்பட்டு ஜி.அசோக் – 9025155455, திருவள்ளூர் கே.திவ்யா – 9952000256, காஞ்சிபுரம் பா.பாலமுருகன் – 9443576011 என்ற எண்களிலும் புகார் அளிக்கலாம்.