பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதையும், கள்ளச்சாராயம் சாவுகளையும் கண்டித்து தமிழக முதல்வர் பதவி விலக வலியுறுத்தி, புதிய பேருந்து நிலையம் பகுதியில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில், விழுப்புரம் அருகே உள்ள மரக்காணம், கள்ளக்குறிச்சி அருகேயுள்ள கருணாபுரம் உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்களுக்கு நீதி கேட்டும், போதை பொருட்கள் கஞ்சா, அபின், ஓபியம் உள்ளிட்டவை விற்பனைக்கு துணை போகும் ஆளும் கட்சியை கண்டித்தும், மின் கட்டண உயர்வு உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேட்டினை கண்டித்தும் முழக்கமிட்டவாறு, தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக்கு வலியுறுத்தி, அது குறித்து அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கடைகள், வணிக வளாகங்கள், பேருந்து பயணிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரிடமும் தமிழக அரசை கண்டித்து முழக்கமிட்டபடி இந்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மேலும் திமுக அரசின் அவலங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள். மகளிர் அணியினர் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.