E-filing -க்கான போதிய இணையதள வசதிகள், போதிய உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில் நுட்ப திறன் கொண்ட நீதிமன்ற ஊழியர்களை நியமிக்காமல், E-filing முறையை கட்டாயப்படுத்தியிருப்பதை கண்டிக்கும் வகையிலும், E-filing-க்குக்கான கட்டமைப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்கும் வரை Manual Filing முறையை அனுமதிக்க வலியுறுத்தி காரைக்கால் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் சங்க தலைவர் திருமுருகன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கண்டனம் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.