• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது … முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் குற்றச்சாட்டு..,

ByP.Thangapandi

Nov 14, 2023

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அத்திபட்டியில் சேடபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், இப்போது இருக்கும் சூழலில் திமுக அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

தீபாவளிக்கு அசுரர்களின் ஆட்சி தான் நடந்தது, எது விற்பனையானதோ மது விற்பனை அமோகமாக நடந்தது, 600 கோடி இலக்கு வைத்து 550 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர். மக்களை பற்றி கவலை இல்லை. இன்று குழந்தைகள் தினம் நமது குழந்தைகளை பண்புள்ளவர்களாக, ஒழுக்கம் உள்ளவர்களாக, அறிவார்ந்தவர்களாக வளர்த்து காப்பாற்றி கொடுக்க வேண்டும்.

ஆனால் இன்றைக்கு இளைய சமுதாயம், கஞ்சா, அபின் என சீரழிந்து போக கூடிய நிலையில் இருக்கின்றனர்., இந்த நிலையை சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி காவல்த்துறை மாணிய கோரிக்கையின் போது புள்ளி விவரத்தின் அடிப்படையில் எடுத்து கூறினார் ஆனால் அவர்கள் நடவடிக்கைகள் எடுக்காத காரணத்தினால் இந்த தீபாவளிக்கு விபத்தின் காரணமாகவும், கொலையின் காரணமாகவும் தீபாவளிக்கு மட்டும் 20 பேர் இறந்துள்ளனர். இது குறித்து எந்த நடவடிக்கைகளும் இல்லை, தீபாவளிக்கு சட்டம் ஒழுங்கையும் காப்பாற்றுவது இல்லை, தீபாவளிக்கு வாழ்த்தும் சொல்வதில்லை.

இந்த நிலையை மாற்றத் தான் இந்த பூத் கமிட்டியை வலிமையோடு கட்டமைத்து கொடுங்கள் கூட்டணியையும், எதிரியையும், துரோகியையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என எடப்பாடியார் தெரிவித்துள்ளார்.