• Fri. Jan 23rd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அகஸ்தீஸ்வரத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடத்தினர். திமுக சார்பாகவும் மாவட்டந்தோறும் பல்வேறு இடங்களில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வருகை தந்த கழக மாணவரணி தலைவர் வழக்கறிஞர் ராஜிவ்காந்தி மற்றும் தலைமை கழக பேச்சாளர் தீக்கனல் தியாகு ஆகியோரை தாமரைபாரதி பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இக்கூட்டத்தில் திமுகவினர் உட்பட பொதுமக்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.