விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஊராம்பட்டி பெரிய கண்மாயில் சிலர் இரவு நேரங்களில் தொடர் மண் திருட்டில் ஈடுபடுவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

தொடர்ந்து இரவு நேரங்களில் நடைபெறும் மண் திருட்டால் கண்மாயில் பல்வேறு இடங்களில் பல அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தண்ணீரை முறையாக சேமித்து வைக்க முடியாத நிலையில் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படும் நிலையும் ஏற்படும் கவலை தெரிவிக்கும் விவசாயிகள் இதுகுறித்து வருவாய்த் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் மண் திருட்டை தடுத்து கனிம வளத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.