கரூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தின் 25 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தின் 25 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, கடந்த ஏழாம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று உலக அமைதி பெறவும், விவசாயம் செழிக்கவும், பொதுமக்கள் நோயின்றி அமைதியாக வாழவும், சுமங்கலி பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருவிளக்கு பூஜை முன்னிட்டு, திருவிளக்கை பூக்களால் அலங்கரித்து அர்ச்சனை செய்து பலவிதமான மந்திரங்களை கூறி, இறுதியாக குத்துவிளக்கிறக்கு தீபாராதனை காண்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களுக்கு மஞ்சள் கயிறு குங்குமம், மஞ்சள், பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






; ?>)
; ?>)
; ?>)
