தீயில் கருகிய செம்மறி ஆட்டு குட்டிகளை பார்த்து தாய் ஆடுகள் கத்திய சம்பவம் இப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள வாகையூரைச்சேர்ந்த செல்வக்குமார் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நேற்று சிவகங்கை மாவட்டம் கோட்டையூரை சேர்ந்த குமார் என்பவர் அமைத்த ஆட்டு கெடையில் 49 செம்மறி ஆட்டு குட்டிகள் தீயில் கருகிய உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து குமார் அளித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில். நேற்று இரவு முதல் தாய் ஆடுகள் அதன் குட்டிகளை காணாமல் கத்திக்கொண்டே இருக்கும் சம்பவம் காண்போரை கண் களங்க வைக்கிறது.