• Wed. Dec 11th, 2024

மேல்சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட லாலு பிரசாத்….

Byகாயத்ரி

Mar 23, 2022

ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை மோசமானதால் மேல்சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் மாட்டுத்தீவன ஊழல் வழக்குகளில் தொடர்ந்து தண்டனை பெற்று வருகிறார். சமீபத்தில் தொரந்தோ கருவூலத்தில் இருந்து சட்டவிரோதமாக ரூ.139.ேகாடி பணம் எடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூ.60 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறியது. இதனை தொடர்ந்து அவர், ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து அங்குள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லாலு இதயநோய் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளால் மேல்சிகிச்சை அளிப்பற்காக லாலுவை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்ப்பதற்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இது தொடர்பாக லாலு பிரசாத்துக்கு சிகிச்சை அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட 7 மருத்துவர் குழுவின் தலைவர் டாக்டர் வித்யாபதி கூறுகையில், ‘‘டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் லாலுவுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ வாரியம் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை சிறை கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்படும்’’ என்றார். இதைத் தொடர்ந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேற்று மாற்றப்பட்டார்.