மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை சிருங்கேரி சங்கர மடத்தில் நவராத்திரி நிறைவு நாள் விஜயதசமியை முன்னிட்டு லலிதா ஹோமம் நடைபெற்றது. சங்கர மட வாத்தியார் கிருஷ்ணமூர்த்தி லலிதா ஹோமம் மற்றும் அர்ச்சனைகள் செய்தார்.

தொடர்ந்து கன்னிகா பூஜை, சுகாசினி பூஜை நடைபெற்றது. தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அறுசுவை அன்னதானம் நடைபெற்றது. இதில் தென்கரை முள்ளி பள்ளம் சோழவந்தான் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.