• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளில் தொய்வு.., அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் கடும் அவதி…

ByKalamegam Viswanathan

Nov 4, 2023
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தச்சம்பத்து பகுதியில் மதுரை மாநகராட்சி குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளில் அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இரவு நேரங்களில் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் வாகனங்களில் செல்லும்போது விபத்துக்கள் ஏற்படும் அபாயம்  உள்ளதாகவும் ஆகையால் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்து பகுதியில் வைகை அணையில் இருந்து மதுரை மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஜே.சி.பி எந்திரம் மற்றும் ராட்சத கிரேன் மூலம் குடிநீர் குழாய்களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதிகளில் பள்ளங்களை தோண்டி பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தச்சம் பத்து முதல் மேலக்கால் பாலம் வரை  உள்ள சாலை ஓரங்களில் பெரிய பள்ளங்களை தோண்டி குடிநீர் குழாய்களை பதித்து விட்டு அதை மூடும் போது முறையாக சாலையை சரி செய்யாமல் விட்டு செல்வதால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது.
குறிப்பாக தச்சம்பத்து பகுதியில் சிறிய மழை பெய்தாலே சேரும் சகதியும் தேங்கி நிற்கிறது. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் கார்களில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆகையால் மாநகராட்சி அதிகாரிகள் இதில் தனி கவனம் செலுத்தி குடிநீர் குழாய்களை பதித்த பின்பு அதை முறையாக சரி செய்ய வேண்டும் என்றும் பெரிய அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.