புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீரு நாள் கூட்டத்திற்கு தமிழ்நாடு விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம் தமிழ்நாடு ஐந்து தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் நிர்வாகிகள் 10க்கு மேற்பட்டோர் ஆட்சியரை சந்தித்து 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பது கோவையில் தங்க நகை தொழில் பூங்கா மற்றும் சிதம்பரத்தில் கௌரி நகை தொழில் பேட்டை அமைக்க உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். அதேபோல் ஒன்றிய அரசு பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்திற்கு 13000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததை சுட்டிக்காட்டி திட்டத்தின் மூலம் வழங்கப்படும் கடன் உதவியை அனைத்து வங்கிகளும் வழங்க தயாராக இருந்தது.

ஆனால் தமிழ்நாடு அரசு இத்திட்டத்தினை புறக்கணித்துவிட்டு அதற்கு பதிலாக தமிழக அரசு அறிவித்த கலைஞர் கைவினை திட்டத்தை மூலம் வழங்கப்படும். கடன் உதவி தேசிய வங்கியில் மற்றும் தனியார் வங்கிகள் புறக்கணிக்கின்றனர். இதனால் சிறுகுறி தொழில் செய்து வரும் தொழிலாளர்கள் மிகுந்த பாதிப்படைகின்றனர். எனவே இது போன்ற இடர்பாடுகளை உடனடியாக தமிழ்நாடு அரசு கலைந்து அனைத்து வங்கிகளும் கடன் உதவி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் வாழும் 70 லட்சம் விஸ்வகர்மா சமூகத்தினருக்கு பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் உள்ள ஒதுக்கீடாக 3.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தமிழக அரசின் .தொழிலாளர் நல வாரியங்களில் கைவினை தொழிலாளர் நலவாரியம் பொற்கொல்லர் நல வாரியங்களில் விஸ்வகர்மா சமூகத்தினரை சார்ந்தவர்களை தலைவராகவும் உறுப்பினராகவும் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட 7அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.இந்த நிகழ்வில் மாவட்டத் தலைவர் ஜானகிராமன் மாவட்ட பொருளாளர் பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.