• Mon. Dec 9th, 2024

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.

பொருள் (மு.வ):

யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிட எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.