• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

பெரியஇலந்தைகுளம் கிராமத்தில் ஸ்ரீமுத்தம்மாள் சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா

ByN.Ravi

Sep 20, 2024

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெரியஇலந்தைகுளம் வடக்கு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தம்மாள் சுவாமி திருக்கோவில், மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில், மங்கள இசை முழங்க விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, பூர்வாங்க பூஜை, கணபதி ஹோமம், கிராம தெய்வங்களுக்கு, கனிவைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து, மூன்று காலை யாக பூஜையுடன் கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வளம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, வடக்கு தெரு ஆதிதிராவிடர் காலனி மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.