• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருவேங்கடப் பெருமாள் கும்பாபிஷேகம் விழா..,

ByP.Thangapandi

Apr 18, 2025

உசிலம்பட்டியில் பழைமையான திருவேங்கடப் பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகம் விழா 28 ஆண்டுகளுக்கு பின்பு முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இந்து அறநிலையத் துறைக்குட்பட்ட சுமார் 500 ஆண்டுகள் பழமையான திருவேங்கடப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.,

இக்கோவில் கும்பாபிஷேகம் விழா 1996-ம் ஆண்டு நடைபெற்ற நிலையில் 28 ஆண்டுகளுக்கு பின்பு வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி கும்பாபிஷேகம் விழா நடைபெறுகிறது., இந்நிலையில் கும்பாபிஷேகம் விழாவின் தொடக்க நாளான இன்று முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.

இதில் அறநிலையத்துறை செயல் அலுவலர் பொறுப்பு இளமதி முன்னிலையில் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், பங்கேற்று பூஜைகள் செய்து முகூர்த்தம் கால் நடப்பட்டது.,

இதில் உசிலம்பட்டி திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி, திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி, திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் முருகன், அதிமுக (ஓபிஎஸ்) அணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.