மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அம்மமுத்தன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது விநாயகர், முத்தாலம்மன், காளியம்மன், சந்தன மாரியம்மன் திருக்கோவில்.,

இந்த கோவிலை 15 ஆண்டுகளுக்கு பின் புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.,


மூன்று கால யாக பூஜைகள் செய்து கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்., தொடர்ந்து கோவிலின் மூல ஸ்தானத்தில் உள்ள பீடங்களில் அபிஷேகம் நடைபெற்றது.,
உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர்., அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.,




