• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அலங்காநல்லூர் ஸ்ரீ மாலையம்மாள் திருக்கோவில் கும்பாபிஷேகம்

ByN.Ravi

May 21, 2024

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரிய இலந்தைகுளம் ஸ்ரீமுத்தம்மாள் கோவில் மற்றும் கள்வேலிபட்டி கிராமத்தில் அமைந்துள்ள
ஸ்ரீமாலையம்மாள் ஸ்ரீகருப்பசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் முதல் நாள் யாக வேள்வி பூஜையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி மங்கல இசை முழங்க கோபூஜை, கணபதி பூஜை மற்றும் தீபாதாரணையும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் காலை மங்கல இசை முழங்க மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. ராமேஸ்வரம், அழகர்கோவில், காசி, கங்கை, உள்ளிட்ட திருத்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் மேளதாளங்கள் முழங்க யாகசாலையை சுற்றி வலம் வந்து கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கருடன் வானத்தில் வட்டமிட கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோவிலில் கருவறையில் உள்ள முத்தம்மாள், மாலையம்மாள், கருப்பசாமி, ஆகிய தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகளும் மலர் அலங்காரமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தந்த சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பூஜை மலர்களும் அறுசுவை அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பெரிய இலந்தைகுளம் தாதகவுண்டன்பட்டி நீலமேகம் வகையறா மற்றும் போஸ் வகையறா உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.