கன்னியாகுமரியின் புதிய அடையாளமாக மாறியுள்ள கண்ணாடி இழைப்பாலம்.
இது வரை 3.5 லட்சம் பேர் கண்டுகளிப்பு -அமைச்சர் எ.வ. வேலு பெருமிதம்.
ஆய்வுக்கு பின் அமைச்சர் எ.வ. வேலு சொன்னவைகள்:
கண்ணாடி பாலம் கன்னியாகுமரியின் அடையாளமாக மாறி உள்ளது. இது வரை 3.5 லட்சம் பேர் கண்டு களித்துள்ளதாக தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
கன்னியாகுமரி கடல் நடுவே 37 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை நேற்று மாலை ஆய்வு செய்த பின் அமைச்சர் எ.வ. வேலு செய்தியாளர்கள் இடம் சொன்னவைகள்.
2025 ஆண்டு கன்னியாகுமரியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்று சொன்னால் மிகையாகாது. திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாட்டம் என்ற வகையில் தமிழக முதல்வர் கன்னியாகுமரியில் ஒரு மாபெரும் நிகழ்ச்சியை நடத்தினார். அதன் பின்னர் கன்னியாகுமரியின் புதிய அடையாளமாக மாறி இருக்கிறது இந்த கண்ணாடி பாலம். இந்தியா முழுவதிலும் இருந்து இந்த பாலத்தை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கிறார்கள். 77 மீட்டர் நீளமும் 10 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கண்ணாடி பாலம் 2.7 மீட்டர் முழுக்க கண்ணாடி இழையினால் ஆனது. ஒரே நேரத்தில் இந்த கண்ணாடி பாலத்தில் 650 பேர் நடந்த செல்லலாம். அந்த அளவிற்கு உறுதி தன்மை மிக்கது. ஏழு மீட்டருக்கு மேல் அலை வந்தாலும் இந்த பாலத்தில் எந்த பாதிப்பும் ஏற்பட்டது.
இதனுடைய உறுதித்தன்மையை பொறுத்தவரை சுனாமி வந்த பொழுது அலையின் வேகம் 55 கிலோமீட்டர் ஆகும். ஆனால் 150 கிலோமீட்டர் வேகத்தில் அலையடித்தாலும் கூட பாலத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த பாலம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தை பார்ப்பதற்காக தினமும் சுமார் 7000 பேர் வருகிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் தினமும் ஒரு நாளைக்கு பத்து முதல் 11 பள்ளி மாணவர்கள் இந்த பாலத்தை வந்து பார்வையிடுகின்றனர்.

கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 2 லட்சத்து 14 ஆயிரத்து 518 பேர் இந்த பாலத்தை கண்டு களித்துள்ளனர். பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி வரை ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 384 பேர் இந்த பாலத்தை பார்வையிட்டுள்ளனர். ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை ஏறத்தாழ 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் சுற்றுலா பயணிகள் இந்த பாலத்தை பார்வையிட்டுள்ளனர் .
இவ்வளவு பேர் பயணித்த பின்னர் இதனுடைய உறுதி தன்மையை எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பதற்காக இன்று ஆய்வு செய்ய வந்துள்ளோம். சென்னையில் ஐஐடி பேராசிரியர்கள் துறை சார்ந்த நிபுணர்கள் அவர்களுடைய வழிகாட்டுதலின் படிதான் இந்த பாலம் கட்டப்பட்டது .

இதனுடைய உறுதித்தன்மையை ஆய்வு செய்யுமாறு தமிழக முதல்வர் ஆணையிட்டதன் பேரில் இந்த ஆய்வை செய்வதற்காக நாங்கள் வந்துள்ளோம். அதன்படி பார்வையிட்டதில் இதன் உறுதித் தன்மை மிகச் சிறப்பாக உள்ளது . மேலும் இந்த பாலத்தை அழகு படுத்துவதற்காக சிறு சிறு வேலைகள் நடந்து வருகின்றன.
உலகம் முழுவதும் இருந்து வருகின்ற சுற்றுலா பயணிகள் இந்த பாலத்தை பார்த்துவிட்டு முதலமைச்சருக்கு தொலைபேசியில் அழைத்து பாராட்டு தெரிவிக்கிறார்கள்.
2025 ஆம் ஆண்டு கன்னியாகுமரியின் புதிய அடையாளமாக மாறியது கண்ணாடி பாலம். இந்த பாலத்தின் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என முதலமைச்சர் உத்தரவின் பேரில் சிசிடிவி பொருத்தப்பட்டு உள்ளது. இரவு நேரங்களில் கண்ணாடி பாலத்தை கண்டு களிக்கும் வகையில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை முறையாக இருக்கிறதா என்பதை பற்றியும் ஆய்வு செய்தோம்.
சேர, சோழ, பாண்டிய மன்னர்களை அடையாளப்படுத்துகின்ற வகையில் மூன்று தூண்கள் அமைக்கப்பட்டு அதில் வில் அம்பு போன்றவற்றை வைத்து அழகு படுத்தும் பணி நடந்து வருகிறது.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்புதான் தான் தமிழர் உடைய அடையாளம் உலகம் அளவில் வெளிவந்து உள்ளது. 5300 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழன் இரும்பை பயன்படுத்தி இருக்கிறான் என்பதை உலகறிய செய்தவர் முதல்வர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வில் அமைச்சருடன் மாவட்ட கலெக்டர் ஆர்.அழகு மீனா, முன்னாள எம்.எல்.ஏ ஆஸ்டின், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், சிறப்பு திட்ட அலுவலர் சந்திரசேகர், தலைமை பொறியாளர் சத்தியபிரகாஷ், கண்காணிப்பு செயற்பொறியாளர் சாரதா, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சத்தியமூர்த்தி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பா.பாபு, கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
