• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

குமரியின் அவ்வை சண்மிகியின் சேட்டைகள்…

இலவச பேருந்து பயணத்திற்காக பெண்வேடமணிந்து பயணம் யூட்டூப்பரின் வைரலாகும் குறும்படம்.

தமிழக அரசு பெண்கள் பேருந்தில் இலவச பயணம் செய்ய அறிவித்து பல பெண்கள் அந்த இலவச பயணத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் குமரி மாவட்டம் குழித்துறை பகுதியை சேர்ந்த யூட்டூப்பர் சர்ஜின் என்ற இளைஞர் ஒரு குறும்படம் எடுத்துள்ளார். அந்த குறும்படத்தில் சர்ஜின் என்ற அந்த இளைஞர் பெண் வேடமணிந்து இலவசமாக பயணம் செய்யும்போது நடத்துனர் மற்றும் ஆண்களின் நடவடிக்கைகள் குறித்து வெளிபடுத்தும் வகையிலும் ஆண்களுக்கு இலவச பயணம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை வெளிபடுத்தும் வகையிலும் இந்த படம் அமைந்துள்ளது.

இந்ந படத்தில் முழு முகசவரம் செய்து புடவை அணிந்து சர்ஜின் பெண்வேடத்தில் ஸாடாப்பிங் ஒன்றில் பேருந்திற்காக காத்திருந்து பேருந்தில் ஏறி இலவச பயண சீட்டை நடத்துனரிடம் பெற்று கொண்டு அந்த நடவடிக்கைகளை ரகசிய கேமராக்கள் மூலம் படமாக்கி கொண்டு இரண்டு நிறுத்தம் தாண்டியதும் நான் பெண் அல்ல ஆண் என நடத்துனரிடம் கூறி பணம் கொடுத்து பயண சீட்டை பெற்று கொண்டு பேருந்தில் இருது இறங்கி.

அடுத்ததாக மார்தாண்டம் பேருந்து நிலையம் வந்து பொது இடத்தில் திடீரென ஒரு பெண் ஆட்டம் போட்டால் பொதுமக்கள் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என நடனமாடி வீடியோவாக பதிவு செய்து விட்டு அடுத்ததாக முழு புடவை உடுத்து பெண் புல்லட் ஓட்டினால் பப்ளிக் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதை பற்றியும் மொத்தம் 12 நிமிடம் ஓடும் வகையில் காட்சிகள் அந்த படத்தில் பதிவு செய்துள்ளனர் அந்த குறும்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பல வரவேற்பு மற்றும் கமெண்டுகளை பெற்று வருகிறது.இந்த குறும்படத்திற்காக புடவை , பிளவுஸ் உட்பட பொருட்களை டெக்ஸ்டைல்ஸ் கடையில் இருந்து வாங்கும் காட்சிகளும்
காட்சியாக்கபட்டுள்ளது இந்த காட்சிகள் அனைத்தும் அவ்வை சண்முகி படம் பார்ப்பதை போல உள்ளது.


இவர் பெட்ரோல் விலை உயர்வை சுட்டி காட்டி நுங்கு வண்டி ஓட்டி உருவாக்கிய குறும்படம் உட்பட பல குறும்படங்கள் வைரலானது குறிப்பிடதக்கது.