நாகர்கோவிலில்_ ஹைதராபாத் இரயில் தொடக்க விழாவில் காங்கிரஸ் கட்சியினர்
பங்கேற்று புதிய ரயிலை வரவேற்றனர்.

குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு ரயில் சேவை வசதிகளை ரயில்வே நிர்வாகத்திலும் பேசி செய்து கொண்டிருக்கிறார். இதன் ஒரு பகுதியாக நாகர்கோவிலில் இருந்து ஹைதராபாத் நகருக்கு நேரடி ரயில் சேவை தேவை என்பதை பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்திய வந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ரயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தி எடுக்கப்பட்ட முன்னேற்ற நடவடிக்கைகளின் மூலம், நாகர்கோவில் – சரளப்பள்ளி (ஹைதராபாத்) இடையே அம்ரித் பாரத் ரயிலை அறிவித்துள்ளது.

இந்த ரயில் இன்று மாலை 5 மணிக்கு நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கியது இந்த ரயிலை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஏற்பாட்டில் காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு கொடுத்து அனுப்பி வைத்தனர்.

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விஜய் வசந்த் பங்கேற்றுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அமைப்பினர் விஜய் வசந்த் சார்பில் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.



