கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயன் சுவாமி கோவில் சித்திரை பெருந்திருவிழாவின் 10 ம் நாளான இன்று (07-05-2025) தெப்பத் திருவிழா நடைபெற்றது.

இரவு 8.00 மணியளவில் சுவாமியும் அம்பாளும் தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்டு இருந்த தெப்பத்தில் ஏறி வலம் வரும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்வில். குமரி அறங்காவலர்கள் குழுமம் தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மற்றும் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பக்த்தர்கள் பெரும் திரளான கூட்டமாக தெப்பத்தில் சுவாமியும், அம்பாளும் தெப்பத்தில் வலம் வந்த காட்சியை மக்கள் தரிசனம் செய்தனர்.