அதிமுக மாநில மகளிர் இணைச்செயலாளரான ராணி நீண்ட கால மாய் ஒரு சுய நலக்குழு குழு(NGO) நடத்தி வருகிறார்.
விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில்அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு ஜாமீன் தொகையையும் இந்தவர்.
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் மேற்கு மாவட்ட மூன்று தொகுதிகளில் ஏதாவது ஒன்றை எப்படியாவது பெற்று விடவேண்டும் என்ற முயற்சியில் இப்போதிருந்தே முயன்று வருகிறார்.

அதிமுக மாநில மகளிர் அணி இணைச்செயலாளர் ராணி கடந்த 10_ ஆண்டுகளுக்கு மேல். நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு எதிராக உள்ள தெருவில் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.
ராணி வாடகைக்கு இருக்கும் வீட்டின் உரிமையாளர் பல்லாண்டுகளாக வெளிநாட்டில் பணி நிமித்தம் தங்கியிருக்கும் நிலையில். ராணிக்கு வீட்டை வாடகைக்கு கொடுத்துள்ளார். எதாவது முன் பணம் வாங்கியது குறித்து தகவல் இல்லை.
ராணி 8_ஆண்டுகளாக வாடகைக்கு இருக்கும் வீட்டிற்கு வாடகையே கொடுக்காத நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யும் படி கேட்ட நிலையில் அவர் இருக்கும் அரசியல் கட்சியினர் அந்த நேரத்தில் ஏதோ சமாதானம் செய்து,கால அவகாசம் கேட்டு வாங்கியதாக அப்போது வெளியான தகவல்.
இந்த நிலையில் வீட்டிற்கு சொந்த காரர் அண்மையில் வீட்டை காலி செய்து குறிப்பிட்ட அவகாசம் கொடுத்தும் வாடகைக்கு குடியிருக்கும் ராணி வீட்டை காலி செய்ய முடியாது என மறுத்த நிலையில் அந்த பிரச்சினையில் ராணியின் சார்பில் சிலர் வீட்டின் சொந்தக்காரர் உடன் பிரச்சனை ஏற்படுத்திய நிலையில் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் நேசமணி நகர் காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ள நிலையில்.
ராணி மற்றும் இருவர் மீது நேசமணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.