• Mon. Mar 24th, 2025

குமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடியேற்றம். புதுவை துணை நிலை ஆளுநர், குமரி மக்களவை உறுப்பினர் பங்கேற்பு.

குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மரியாதை நிமித்தம், பூங்கொத்து கொடுத்து புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை வரவேற்றார்.

குமரி மாவட்டம் புகழ் பெற்ற பகவதி வழிபாடு தலங்களில் மிகுந்த சிறப்பு பெற்றது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். இந்த கோயிலின் தனி சிறப்பு.பெண்களின் சபரிமலை என புகழ் பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவின் முதல் நிகழ்வான கொடியேற்றம் இன்று (03.03.24)காலை நடைபெற்றது.

திருக்கொடி கோவில் சுற்றுபிரகாரம் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு வேத மந்திரங்களுடன் திருக்கொடி யேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், குமரி ஆட்சியர் ஸ்ரீதர், குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னாள் பத்மநாபபுரம் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வேலாயுதம் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

கொடியேற்றம் நிகழ்விற்கு பின் இந்து சமூக மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் கெளரவிக்கப்பட்டார்,மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

திருவிழா நாட்களான பத்து நாட்களும் இந்த நிகழ்வு தினமும் நடைபெறும். மண்டைக்காடு திருவிழாவிற்காக, தமிழக அரசின் போக்கு வரத்து துறை, திருவிழா சிறப்பு பேரூந்துகளை இயக்குகிறது.