• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

குமரி கொட்டாரம் சார்பதிவாளர்- அலுவலக உதவி ஆய்வாளர் அப்ரோஸ்(32) மீது வழக்குப்பதிவு

கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவிற்கு லஞ்சம் வாங்கப்படுவதாக தொடர்ந்து வந்த புகாரைத் தொடர்ந்து. லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்த நிலையில்,

கடந்த (மே_30)ம்தேதி இரவு லஞ்ச ஒழிப்பு கூடுதல் சூப்பிரண்ட் ஹெக்டேர் தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜான் பெஞ்சமின், சிவசங்கரி மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை காவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனை இரவு 9 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12.30 வரை நடைபெற்ற சோதனையில் அங்கிருந்த சார்பதிவாளர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அப்ரோஸ்(32) என்பவரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி மேற்கொண்ட சோதனையில், அப்ரோஸ் பேன்ட் பாக்கெட்டில் ரூ.1லட்சத்து,2 ஆயிரத்து 500 இருந்தது தெரிய வந்தது. அதிகாரிகளின் தொடர் விசாரணையில் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்த நிலையில் அப்ரோஸ்யின் உதவியாளர் மோகன் பாபுவிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் உதவியாளர் மறைத்து வைத்திருந்த ரூ.1000த்தை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் இரவு 12.30 வரை இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் இருந்த பிறகும் பொறுப்பு அதிகாரி நியமினம் செய்யப்பட்டு பத்திரப்பதிவு நடைபெற்றது ஏன் என்பது குறித்தும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு பத்திரப் பதிவு நடந்திருப்பது பத்திர பதிவு துறையின் ஊழலின் அடிப்படையே என்ற பரபரப்பை பொதுமக்கள் இடையே ஏற்படுத்தியுள்ளது.