தமிழக பாஜகவின் வரலாற்றில் குமரியும், கோவையும் சற்றே பாஜக செல்வாக்கு பெற்ற மாவட்டங்கள் என்பதின் அடிப்படையை உண்மை ஆக்கியது. பொன்னார் நாகர்கோவில் மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றி சொல்லும் உதாரணம்.
குமரி பாஜகவில் ஆளுமை நிறைந்த வலிமை பெற்றுள்ளார் பொன்னார் என்பது கடந்த கால 10 நாடாளுமன்ற (ஒரு இடைத்தேர்தல்) உட்பட பொன்னார் மட்டுமே 10 முறை போட்டி போட்டு, இரண்டு முறை வெற்றி பெற்றார். நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியில் ஒரு முறை போட்டி இட்டு, அதிலும் தோல்வி என்றாலும் மனம் தளராமல் தேர்தல் களம் காண்பவர் பொன்னார் என்பதை குமரியில் உள்ள மற்ற கட்சியினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ள வியப்பு.


இந்தியா முழுவதும் பாஜக கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை தொடங்கி உள்ளதின் வரிசையில், நாகர்கோவில் உள்ள வீடுகளுக்கு பொன்னார், நாகர்கோவில் மாநகராட்சி பாஜக கவுன்சிலர்கள் முத்துராமன், மீனாதேவ் மற்றும் அந்த, அந்த பகுதியில் உள்ள கட்சியின் பல்வேறு பொருப்பாளர்கள்.பொன். இராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று வீடு, வீடாக சென்று பாஜக கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை தொடங்கி உள்ளனர்.

குமரிக்கு இன்று பாஜகவிற்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியை உற்சாகப்படுத்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன். நாகர்கோவில் உள்ள பாஜகவின் மாவட்ட அலுவலகத்தில் கட்சியினர் மத்தியில் நடக்கும் ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்கும் அமைச்சர் எல். முருகன், அதன் பின் பார்வதி புரத்தில் நடக்கும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்விலிலும் பங்கேற்கிறார்.