• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குமரி மாவட்டம் கேரளாவின் குப்பைக் கூடை அல்ல. குமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த் கடுமையான கண்டனம்.

கேரளாவில் இருந்து கோழிக் கழிவுகள் மற்று மருத்துவ கழிவுகளை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பன்றி பண்ணை கொட்ட வரும் வாகனங்களை பொதுமக்கள் சிறை பிடித்து காவல்துறையினரும் ஒப்படைத்து வருகின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் அடுத்த மருங்கூர் பகுதியில் இன்று கோழி கழிவு மற்றும் மருத்துவ கழிவுகளை அப்பகுதியில் கொட்ட வந்த வாகனத்தை அப்பகுதி மக்கள் சிறை பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்த குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து வாகனத்தை பார்வையிட்டார். அதில் கோழி கழிவு மற்றும் மருத்துவ கழிவு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இந்த கழிவு வாகனத்தை உடனடியாக போலீசில் ஒப்படைக்க உத்தரவிட்டார். மேலும், கழிவுகளை கொட்ட வரும் பன்றி பண்ணைகளை சீல் வைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவு விட்டார். இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் கால பெருமாள் ஹெலன் உட்பட பலர் உடன் இருந்தனர்.