மோதிரமலை அருகே அண்மை மழையால் பாதிக்கப்பட்ட தரை பாலத்தை உடனே சீர் செய்ய உத்தரவிட்ட குமரி ஆட்சியர் அழகு மீனா-வை மலைவாழ் மக்கள் பாராட்டுகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், கடையால் பேரூராட்சிக்குட்பட்ட பேச்சிப்பாறையிலிருந்து மோதிரமலை செல்லும் சாலையான மூக்கரைக்கல் பகுதியில் அமைந்துள்ள தரைப்பாலம் சேதமடைந்துள்ளது. இதனால் அரசு பஸ் திரும்ப இயலாத நிலை உருவாகி மக்கள் போக்குவரத்து 05.11.2024 முதல் தடைபட்டுள்ளது. இந்நிலையில் மாற்று ஏற்பாடாக மலைவாழ் மக்கள் தடையில்லாமல் பயணம் செய்ய மினிபாஸ், வேன்கள் அப்பாதையில் செல்ல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நாகர்கோவில் பொது மேலாளருக்கு மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
