• Thu. May 2nd, 2024

குமரியும் “வந்தே பாரத்” ரயிலும்..!

சுதந்திர இந்தியாவில், குமரி மாவட்டம் தான் இரயில் இல்லாத மாவட்டம் என்ற நிலையில் இருந்தது. நாகர்கோவில் மக்களவை உறுப்பினராக இருந்த குமரி தந்தை மார்சல் நேசமணி மரணம் அடைய. 1969-ம் ஆண்டு நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காமராஜர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
காமராஜர் முயற்சியால் தான், அன்றைய ஒன்றிய அரசில் ரயில்வே துறை அமைச்சராக இருந்த பைய் மற்றும் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடமும், நாடாளுமன்றத்தில் காமராஜர் குமரிக்கு ரயில்வே தேவையின் காரணங்களை தொடர்ந்து வெளிப்படுத்தினார். ரயில்வே தொடக்கப் பணிகளை அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார். விழாவில் காமராஜர் அன்றைய அமைச்சர் ராஜாராம் ஆகியோர் பங்கேற்றனர். அன்றைய தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரவியம் வரவேற்றார்.
கன்னியாகுமரி ரயில்வே பணிகள் முழுவதும் முடிவடைந்து கன்னியாகுமரியில் ரயில்வே இயக்கத்தை தொடங்கி வைத்தவர் அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய். அப்போதைய நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர் குமரி அனந்தன். கன்னியாகுமரி ரயில்வே மதுரை கோட்டத்துடன் இருந்ததை பின்னர் திருவனந்தபுரம் கோட்டத்துடன் இணைக்கப்பட்ட பின். தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது என்ற குற்றச்சாட்டும் இன்று வரை ஒலித்துக் கொண்டிருக்கிறது. அத்துடன் கன்னியாகுமரியை மீண்டும் மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என்ற முயற்சியும் ஓய்ந்த பாடில்லை.
கன்னியாகுமரி மக்களவை உறுப்பினராக வசந்த குமார் இருந்த காலம் தொட்டு இன்று அவரது மகன் விஜய் வசந்த் வரையிலும் தொடர்ந்து வரும் முயற்சி. இந்தியாவின் தென் கோடி பகுதி மட்டும் அல்ல சர்வதேச சுற்றுலா பகுதி என்ற நிலையில், தொலைதூர ரயில்கள் நாகர்கோவில் சந்திப்பு, திருவனந்தபுரம் சந்திப்பு வரும் ரயில்கள் எல்லாம் கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும். இப்போது கன்னியாகுமரி ரயில் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு, கூடுதல் நடைமேடைகள் இருப்பதால், சுற்றுலா பயணிகள் வசதி பெறுவார்கள் என்ற கோரிக்கையை விஜய் வசந்த் தொடர்ந்து வலியுறுத்தி வரும் சூழலில், விஜய் வசந்த்தின் நீண்ட கால கோரிக்கையான, கன்னியாகுமரியில் இருந்து வேளாங்கண்ணிக்கு ரயில் சேவை கோரிக்கை அண்மையில் நிறைவேறியது.
இந்தியா முழுவதும் “வந்தே பாரத்” ரயில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், விஜய்வசந்த் முயற்சியில் சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் வாரந்திர ரயில் நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது அவரது தொடர் முயற்சிக்கு கிடைத்துள்ள வெற்றி..
இதுகுறித்து, விஜய் வசந்த், வந்தே பாரத் ரயிலின் இயக்கம் பற்றி “அரசியல் டுடே”விடம் தெரிவித்ததாவது..,
தெற்கு ரயில்வே துறை முதலில் 2024 ஜனவரி (4,11,18,25)ம் தேதிகளில்”வந்தே_பாரத் ரயில்கள் நாகர்கோவில் சந்திப்பில் இருந்து, சென்னைக்கு இயக்க போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 05.15 மணிக்கு புறப்பட்டு அதே தினத்தில் பிற்பகல் 02.10 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும். மறு மார்க்கத்தில், நாகர்கோவில் சந்திப்பில் இருந்து பிற்பகல் 02.50 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும் என துறை சார்ந்த அறிவிப்பு என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *