கன்னியாகுமரி அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் தாமரை தினேஷ் ஏற்பாட்டில், தென்தாமரைகுளம் சக்தி மஹாலில் நடைபெற்ற அதிமுக குடும்ப சந்திப்பு நிகழ்வில் பங்கேற்ற நிகழ்வில் பேசிய கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் கூடியிருந்த கட்சியினர் மத்தியில் வரும் சட்டமன்ற தேர்தல் நமக்கு ஒரு சவாலான தேர்தல். நாம் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி,கூட்டணி பலத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து விடலாம் என்ற கனவில் யாரும் இருக்காதீர்கள். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் முழுமையாக இரண்டு ஆண்டுகள் கூட இல்லாத நிலையில். கூட்டணி பலத்தில் வெற்றி பெற்று விடலாம் என்ற நினைப்பில் இருக்குதீர்கள். ஒவ்வொரு பகுதியிலும் 10 உறுப்பினர்களை கொண்ட குழுவை அமைக்க வேண்டும். ஒவ்வொரு குழுவிலும் இரண்டு பெண்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் அந்த குழுக்கள் பொதுமக்கள் மத்தியில் அதிமுக வுக்கு தேர்தல் காலத்தில் மக்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்ற பரப்புரையை தினம் மேற்கொள்ள வேண்டும்.


கூட்டுறவு வங்கிகளின் கடன் பெறுவதில் பொது மக்களுக்கு இருக்கும் சிரமங்களை, பத்திர பதிவு அலுவலகத்தில் நடக்கும் அதிகாரிகளின் கட்டாய லஞ்சம் வசூல்,மின் கட்டண உயர்வு இதை எல்லாம் நீங்கள் சந்திக்கும் மக்களிடம் ஒரு திண்ணை பிரச்சாரமாக செய்யுங்கள். கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் தொகுதிக்கு கட்சியின் தலைமையில் இருந்து மூன்று பார்வையாளர்கள் போடப்பட்டுள்ளார்கள். ஒன்றிய செயலாளர்கள் பொறுப்பு பார்வையாளர்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.


அ ம மு க, சரத்குமார் கட்சிகளில் இருந்து விலகிய 10_க்கும் அதிகமானவர்கள் அவர்கள் தளவாய் சுத்தியல் திறந்து சால்வை அணிவித்து அதிமுகவில் இணைத்துக் கொண்டார்கள். நிகழ்வில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் தாமரை தினேஷ், அகஸ்தீசுவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெசீம் ஆகியோர் உரையாற்றினார்கள். அதிமுக தலைமை கழக பேச்சாளரும் திரைப்பட இயக்குநர் நாஞ்சில் பி.சி அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர்.
