• Fri. Jan 17th, 2025

குங்ஃபூ பிளாக் பெல்ட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு- “லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை சங்கமம்”சார்பாக பாராட்டு!

Byஜெ.துரை

Mar 17, 2024

சென்னை கே.கே.நகர் நகரில் அமைந்துள்ள சிவன் பூங்காவில் மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர் டீனோ, தற்காப்பு கலையான ஷாவோலின் சைனீஸ் மங்கி குங்ஃபூ பயிற்சியளித்து வருகிறார். இதில் சுமார் 20 மாணவ, மாணவிகள் ஷாவோலின் சைனீஸ் மங்கி குங்ஃபூ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்,

இந்த பயிற்சியானது 3 மாதத்திற்கு ஒரு முறை தகுதி தேர்வு அடிப்படையில் வெற்றி பெற்றவர்களுக்கு கலர் கிரேட் பெல்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கபடும். இதில் முக்கியமாக கருதப்படும் பிளாக் பெல்ட் 3 வருட பயிற்சிக்குப் பின் தேர்வானவர்களுக்கு வழங்கப்படும்,

இந்த பிளாக் பெல்ட் தேர்வில் வெற்றி பெற்ற மீனா, இவியா, சரண் ஆகிய மூன்று பேருக்கும் சென்னை லயன்ஸ் கிளப் சங்கமும் சார்பாக சால்வை அணிவித்து மாணவர்களை கௌரவப்படுத்தினர்.

இந்த பிளாக் பெல்ட் வழங்க ஷாவோலின் சைனீஸ் மங்கி குங்ஃபூ தற்காப்புக் கலையின் இந்தியாவின் முதன்மை பயிற்சியாளர் நாகராஜன் வருகை தந்து மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பிளாக் பெல்ட் வழங்கினார்.

இதனைப் பெற்றுக் கொண்ட மாணவர்கள் தவறான வழிகளுக்கு இந்த கலையை ஒரு போதும் உபயோகிக்க மாட்டேன் என்ற உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்.