கன்னியாகுமரி மாவட்டம் திருநைனார் குறிச்சி கபடி அணியின் நட்சத்திர வீராங்கனை தன்யா தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த ஜன 27ம் தேதியில் நடந்த தேசிய சீனியர் பெண்கள் கபடி போட்டியில் வெண்கல பதக்கத்துடன், பரிசு தொகையும் சான்றிதழும் பெற்றார்.

இன்று காலை ரயில் மூலம் நாகர்கோவில் வந்தடைந்த அவரை குமரி மாவட்டம் முன்னாள் அறங்காவலர் குழு தலைவரும், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி கிழக்கு மாவட்ட அமைப்பாளர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் அவர்கள் சால்வே அணிவித்து வரவேற்றார்.
உடன் கன்னியாகுமரி மாவட்ட கபடி கழக செயலாளர் சுபாஷ், நாகர்கோவில் தெற்கு பகுதி செயலாளர் ஜீவா, மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராமதாஸ், துணைத் தலைவர் மால்டன் ஜினின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்










