• Tue. Jun 2nd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

திமுக நிர்வாகிகளுக்கு பாராட்டுகள்

ByP.Thangapandi

Dec 31, 2024

உசிலம்பட்டி அருகே கிராமத்தின் விளையாட்டு மைதானத்தை சீரமைத்து கொடுத்த திமுக நிர்வாகிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மானுத்து கிராமத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில், இந்த மானுத்து ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு கிராம இளைஞர்களும் மாணவர்களும் விளையாட்டு போட்டிகள் மற்றும் உடல் தகுதி தேர்வுகளுக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த விளையாட்டு மைதானம் முறையான வசதிகள் இல்லாது, ஆங்காங்கே முட்செடிகள் மற்றும் மரங்கள் வளர்ந்தும் காணப்படுவதால் விளையாட வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இடையூறாக இருந்துள்ளது.

இதனை அறிந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் தலைமையிலான திமுக நிர்வாகிகள் மற்றும் மானுத்து கிராம ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் சின்னச்சாமி உள்ளிட்டோர் இந்த விளையாட்டு மைதானத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் சீரமைத்து வருகின்றனர்.

கிராம இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நலனுக்காக விளையாட்டு மைதானத்தை சீரமைத்து கொடுத்த திமுக நிர்வாகிகள் மற்றும் கிராம ஊராட்சி நிர்வாகத்தை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பாராட்டி வருகின்றனர்.