அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட , திருமானூர் ஒன்றியம், அரசு பள்ளிகளில் + 1 பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளி, திருமழாப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி, இலந்தைக்கூடம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி, கோவிலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, கீழக்கொளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, குருவாடி அரசு மேல்நிலைப்பள்ளி, காமரசவல்லி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த 592 ,+ 1மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி,சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வுகளில் மாவட்ட மதிமுக செயலாளர் க.இராமநாதன் , திருமானூர் ஒன்றிய திமுக செயலாளர்கள் இரா .கென்னடி, ரெ.அசோக சக்கரவர்த்தி, கேஜிஎஸ்முருகன், மதிமுக ஒன்றிய செயலாளர்கள் பி.சங்கர், கு.பிச்சைபிள்ளை, நெ.இரமேஷ்பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்









