அருந்ததியர் சமூகத்தின் மாற்றத்திற்கான இன்றைய தேவைகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளும் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது.
இதில் பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் E.R. ஈஸ்வரன் சட்டமன்ற உறுப்பினர் பேசினார்.
அவர் பேசுகையில், “ தமிழ்நாட்டில் பி,சி. எம் பி சி மற்றும் எஸ்சி, எஸ்டி உள்ள பிரிவுகளை ஏபிசி என்று மாற்றினால் தமிழ்நாட்டில் எந்த ஒரு ஏற்றத்தாழ்வுகளும் இருக்காது. அனைவரும் சமம் என்ற நிலை ஏற்படும்.
தமிழ்நாட்டில் அருந்ததியர் மக்களுக்காக தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களும் இன்று திராவிட மாடலின் தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களும் அருந்ததியர் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றனர்.
3% சதவீத இட ஒதுக்கீட்டினால் இன்றைக்கு அருந்ததியர் சமுதாய மக்கள் பொருளாதாரத்தில் மேன்மை அடைந்து வருகிறார்கள். அதற்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தான் காரணம். கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி அருந்ததியர் சமுதாய மக்களுக்கு 2009 ஆம் ஆண்டு முதல் இன்று வரை உறுதுணையாக இருந்து வருகிறது. என்றைக்கும் உறுதுணையாக நிற்போம்” என்று பேசினார் ஈஸ்வரன்.
இந்த நிகழ்வில் திரு. கொல்லபள்ளி இஸ்ரேல் அவர்கள் TAAMS நிறுவனர் தலைமை வகித்தார்.
முன்னிலை திரு.வழக்கறிஞர் P.புருசோத்தமன், திருவேடவாக்கம் சி.சீனிவாசன், தலைவர் அருந்ததியர் மக்கள் நலச்சங்கம், .D.லோகேஸ்குமார் தலைவர் அருந்ததி கட்சி மாநில தலைவர் MRTS
வரவேற்புரை.ST.கல்யாணசுந்தரம் அவர்கள் தலைவர் தமிழ்நாடு அருந்ததியர் இளைஞர் முன்னனி நிகழ்த்தினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக திரு.E.R.ஈஸ்வரன் MLA, திரு.கிறிஸ்துதாஸ் காந்தி IAS,. திரு. S.செல்வக்குமார் M.A, Phil.,
திரு. மூ.பொன்தோஸ், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் உறுப்பினர்கள்
திரு.V.மணிவண்ணன் IAS, திரு.கோவிந்தராஜ் IAS (ஓய்வு), திரு.இரா.வீரவேந்தன், திரு.ஆனந்தராஜ்,
திரு.இரா.சந்தானம் BE, மாநில கண்காணிப்பு குழு உறுப்பினர் தலைவர் அருள் ஒளி சங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.
கருத்துரையாளர்களாக ஓயாத அலை வெ.இராஜசேகரன், தலைவர் சமூக விடுதலை முன்னணி, K.A.வரதராஜன்,
மாநில தலைவர் தமிழ்நாடு அருந்ததியர் சங்கம், திரு.குருவை குமார் -நிறுவனர் தலைவர் அருந்ததியர் மக்கள் பேரவை,
திரு.N.A.கிச்சா- மாநில தலைவர் தலித் விடுதலை இயக்கம், திரு. P.L.சீனிவாசலு –
தலைவர் மக்கள் சேவை அறக்கட்டளை ஆகியோர் கலந்து கொண்டனர்.
வழக்கறிஞர்N.லட்சுமிபதி- மாநில தலைவர் நமது தேசம் கட்சி, .இரா.தமிழின்பன்,
தலைவர் விடுதலை வேங்கைகள் கட்சி, G.சுப்பிரமணி- மாநில தலைவர் தமிழ்நாடு அருந்ததியர் மக்கள் கட்சி, ஆவடி P.K.ரங்கநாதன்- நிறுவனர் தலைவர் அருந்ததியர் மக்கள் முன்னேற்றக் கழகம்..க.இராவணன்-
தலைவர்- சமூக விடுதலை களம், T.சேகர்- மாநில செயற்குழு உறுப்பினர் அருந்ததியர் மக்கள் நலச்சங்கம் உள்ளிட்ட 150 க்கு மேற்பட்ட அருந்ததியர் நலச் சங்கங்கள் பேரவைகள் முன்னணி கட்சிகள் பலர் கலந்து கொண்டனர்